பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது $9

ரோஜாப் புஷ்பங்கள், ஒரு தங்க ஸ்தாலியில் சுத்த ஜலம், வாசனைத் திரவியங்களுடன் கூடிய தாம்பூல வஸ்துக்கள், திவ்ய பரிமளகந்தம் நிறைந்த சந்தனம், பன்னீர்ச்செம்பு, தங்கப் பாளங்கள் போலிருந்த வெற்றிலை, அவற்றின் மேல் இரண்டு ரூபாய் தகவினை முதலியவைகளை வைத்துக்கொண்டு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தான். தம்பதிகளிருவரும் குழந்தை சமேதராய் மண்டபத்திற்குப் போக தவசிப் பிள்ளை அருகில் வந்து வெள்ளித் தாம்பாளத்தை நிரம்பவும் வணக்கமாக அவர்களுக்குப் பக்கத்தில் ஏந்தியபடி நின்றான். அவ்வளவு அபாரமான செல்வத்திற்கு உரியவர்களாயிருந்த அந்தத் தம்பதிகளின் குணவொழுக்கங்களைக் கண்ட திவான் சாமியார் முற்றிலும் பிரமிப்படைந்து ஆநந்த பரவசமெய்தி சொக்கிப்போய் மெளனமாக உட்கார்ந்துவிட்டார். அந்த சதிபதிகள் இருவரும் மனமொத்து ஒரேவிதமாக ஒழுகியதை திவான் காணவே,. அவரது மனத்தில், தமது பழைய காலத்து வாழ்க்கை நினைவிற்கு வந்தது. தமது மனையாட்டியான காந்திமதியம்மாள் தம்மிடம் அப்படித்தான் நடந்துகொண்டாள் என்ற நினைவு தோன்றவே, அவரது மனம் அவ்விடத்தில் நடந்தவைகளை விட்டு திருவனந்த புரத்தில் தாமும் தமது மனையாளும் இருந்து வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த இன்பகரமான பல காட்சிகளை நினைந்து அவற்றில் ஈடுபட்டுப் போய்விட்டது. ஆகவே, அவரது உடம்பு மாத்திரம் கற்சிலைபோல அவ்விடத்தில் இருந்ததேயன்றி, அவரது கவனம் முழுதும் வேறிடத்தில் இருந்தது. அப்பொழுது சதிபதிகள் இருவரும் பயபக்தி விநயத்தோடு தமது கைகளைக் குவித்து, பரதேசிகள் இருந்த விசிப்பலகையைச் சுற்றி மூன்று தரம் வலம் வந்து பிரதrணம் செய்து, ரோஜாப் புஷ்பங்களை எடுத்து அவர்களது பாதங்களில் சேர்த்து, சந்தனம் வழங்கி, பன்னீர் தெளித்து, தகவினையோடு வெற்றிலை பாக்கு முதலிய வஸ்துக்களை அவர்களிடம் வைத்துவிட்டு அவர்களை நோக்கி நிரம்பவும் உருக்கமாக நமஸ்கரித்தனர். திவான் சாமியார் வேறிடத்தில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தார் ஆதலால், அவ்விடத்தில் வழங்கப்பட்டது இன்னது என்பதை அறியாம லேயே அவரது கைகள் ஏற்றுக்கொண்டன. உதவிச் சாமியார் எல்லாவற்றையும் கவனித்தார். ஆனாலும் வாயைத் திறவாமல் மெளனியாயிருந்தே அந்தப் பூஜையை ஏற்றுக் கொண்டார்.