பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது iOf

பலனை என்று கூறித் தமது புருஷனையும் இழுத்துக்கொண்டு ஒடித் திவான் சாமியாருடைய பாதத்தடியில் மறுபடியும் விழுந்து விழுந்து பன்முறை நமஸ்கரிக்கிறார்; அவளது தேகம் சகிக்க இயலாத பெருத்த மனவுணர்ச்சியினாலும், ஆனந்தக் களிப்பினாலும் ஆவேசம் கொண்டு துடிக்கிறது. அந்தக் காட்சியை மிகுந்த பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்ற சத்திரத்தையரை அந்த ஸ்திரீ அழைத்து, ‘ஐயரே! நம்முடைய ஆள்களைக் கூப்பிடுங்கள். ஒருவனை நம்முடையவளவுக்குத் துரத்தி, உள்ளே வைத்திருக்கும் பன்னிர் சீசாக்களில் இருபது இருபத்தைந்தை ஒரு கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு வரச் செய்து, அவைகளை உடைத்து இந்த மண்படத்திற்குள்ளும் இதைச் சுற்றிலும் தெளியுங்கள். வேறு சிலரை விட்டு மாவிலை, தோரணம், இளநீர்குலைகள், தேர்ச்சீலைகள் முதலியவற்றைக் கொண்டுவந்து இவ்விடத்தில் கட்டச் செய்யுங்கள். ஒருவனை அனுப்பி உடனே வாத்தியக்காரர்களை வரவழைத்து இங்கே வாசிக்கச் செய்யுங்கள். கோவில் குருக்கள் ஐயர், முதலியவர் களிடம் ஆள்களை அனுப்பி எடுபிடி சாமரை முதலியவைகளுடன் பூர்ண கும்பம் எடுத்துக் கொண்டு வரச் செய்யுங்கள். நம்முடைய வளவில் பெங்களுரிலிருந்து வரவழைத்து வைத்திருக்கும் சீமை இலந்தை, கமலா, மல்கோவா மாம்பழம் முதலிய கனிவகைகள் இருக்கின்றன. அவைகளை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து, நம்முடைய குமாஸ்தாவை அழைத்து, நாம் போன மாசத்தில் வாங்கி வந்து அலமாரியில் வைத்திருக்கும் நூறு பவுன்களையும் அப்படியே அந்தத் தட்டில் கொட்டி எடுத்துவரச் செய்யுங்கள். முதலில் சத்திரத்திற்கு ஒடி எனக்கும் என் புருஷனுக்கும் பன்னிர் தெளித்த விளாமிச்சம் வேர் விசிறிகள் இரண்டு கொண்டு வாருங்கள். வெல்வெட் சோபாக்களையும் மற்ற வெள்ளி சாமான்களையும் வரவழையுங்கள். இவர்கள் யார் தெரியுமா? இவர்கள்தான் இந்தச் சத்திரத்துக்கும் இன்னும் பல ஸ்தலங்களிலும் கட்டப்பட்டிருக்கும் தர்ம சத்திரங்களுக்கும் சொந்தக்காரர்களான முதலியார் ஐயா நிற்கவேண்டாம். சீக்கிரம் போய் எல்லாவற்றையும் வரவழையுங்கள்’ என்று ஒரு கூடிணநேரத்தில் நூற்றுக் கணக்கில் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டாள். சத்திரத்தையர் மின்சார சக்தியால் ஊக்கப்பட்டவர்