பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 103

இவர்களுக்கு நான் என்ன செய்தேன் என்பது தெரியவில்லையே! இவர்களை நான் பார்த்ததாகக்கூட நினைவுண்டாகவில்லையே! இவர்கள் என்னை வேறே யாரோ ஒருவராக மதித்து ஆள் மாறாட்டமாக இந்த மரியாதைகளை நடத்துகிறார்கள். சேச்சே நாம் இனி சும்மாயிருப்பது பிசகு. இவர்களுடைய தவறை நான் திருத்த வேண்டும்” என்று தமக்குள் தீர்மானித்துக் கொண்டார். அப்பொழுதும் தமது புருஷர் விஷயத்தையறிந்து கொள்ளாமல் விழித்துக்கொண்டே விசிறியதைக் கண்ட அந்த ஸ்திரீ “இன்ன இது! இன்னமும் நீங்கள் அடையாளங்கண்டு கொள்ளாவிட்டால், நான் இதை என்னவென்று சொல்லுகிறது? சிந்தா நாஸ்தி என்ற ஊரில் போலீசாரால் நமக்கு ஏற்பட்ட இடர்களையெல்லாம் போக்கி, முடிவில் தீவாந்திர சிrையும் இல்லாமல் செய்துவைத்த நம் தெய்வத்தின் அடையாளத்தை இப்படியும் மறக்கலாமா!’ என்றாள்.

அப்பொழுதே அவளது புருஷருக்கு உண்மை விளங்கியது. ‘ஆ அப்படியா அவர்களா இந்தக் கோலத்திற்கு ஆளாயிருக் கிறார்கள்! அவர்கள் இறந்து போய்விட்டதாகவல்லவா சொல்லிக் கொண்டார்கள். அதனால் அல்லவா என் மனசில் அவர்களைப் பற்றிய சந்தேகமே உண்டாகவில்லை! ஹா! அப்படியா!’ என்று கூறித் தமது மனையாள் அடைந்ததைவிடப் பன்மடங்கு அதிகரித்த ஆவேசமும், ஆநந்த வெறியும் கொண்டு, திவானினது பாதத்தடியில் சென்று அவைகளைத் தொட்டுத் தொட்டுத் தமது கண்களில் ஒற்றிக் கொண்டு, ‘என்னப்பனே! மகாப் பிரபுவே! பரம புருஷரே! நாங்கள் இனி அழிந்தே போய்விட்டோம் என்ற மகா விபரீதமான நிலைமையில் இருந்த எங்களுக்குப் புது உயிர் கொடுத்து எங்களுடைய இடர்களை யெல்லாம் களைந்து, நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கும் படியாகச் செய்த எங்கள் குலதெய்வமே! அந்த் அடிமைகளின் அடையாளம் தங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கூறி ஆனந்தக் கண்ணிர் சொரிகிறார்; ஆனந்தக் கூத்தாடுகிறார் வெள்ளித் தட்டுகளில் வந்திருந்த கனிவர்க்கங்களையும், பவுன் களையும் எடுத்து அவருக்கு முன்னால் வைத்து, ‘முற்றிலும் அணைந்துபோன எங்கள் குடும்ப விளக்கை ஏற்றிவைத்த கருணைக் கடலே! இந்த