பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 செளந்தர கோகிலம்

அடிமைகளின் பாத காணிக்கையை ஏற்றுக் கொண்டருள வேண்டும்’ என்று கூறித் தமது இருகை களையும் கூப்பி இறைஞ்சி மன்றாடினார். அப்பொழுது அவரது மனையாட்டியும் திவான் சாமியாரை நோக்கி, “மகாப் பிரபுவே! திருவருட் செல்வச் சீமானே! ஆதியில் நாங்கள் பரம ஏழையா யிருந்தவர்களென்ற நினைவினால் தாங்கள் எங்களுடைய பாதகாணிக்கையை உல்லங்கனம் செய்யக் கூடாது. எப்படி யாவது பெரிய மனசுசெய்து இதை ஏற்றுக் கொண்டுதான் திர வேண்டும். தங்களையும், தங்களுடைய தேவியாரையும், குழந்தையையும் இனி மறுபடி நாங்கள் காணப்போகிறோமா என்று இரவு பகல் எண்ணி ஏங்கிக் கிடந்ததற்கு, செந்திலெம் பெருமான் இன்று தங்களுடைய தரிசனத்தைச் செய்து வைத்தார். தங்கள் தேவியாரும், குழந்தைகளும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் இவ்விடத்திலிருந்து வந்தபிறகு அவர் களுக்கும், தங்களுக்கும் எவ்விடத்திலாவது சந்திப்பு ஏற்பட்டதா? இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இவைகளை யெல்லாம் தெரிவித்தருள வேண்டும்; எங்கள் குலதெய்வமே’ என்று கூறி இறைஞ்சினாள். அவ்வளவு தூரம் அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்ட பிறகே திவான் சாமியாருக்கு அவர்கள் இன்னார் என்ற நினைவு உண்டாயிற்று. அந்தப் பெண் சிந்தா நாஸ்தியில் இருந்த வீரம்மாள் என்ற கள்ள ஜாதிப் பெண் என்பதையும், அவளது புருஷன் போலீசாரால் மூன்று தடவை அக்கிரமமாகத் தண்டனையடைந்து முடிவில் தம்மால் தப்பு விக்கப்பட்ட கண்ணுச்சாமி என்பதையும், அவர் நன்றாக உணர்ந்து கொண்டதன்றி, அவர்கள் தமது விஷயத்தில் கொண்டிருந்த அபாரமான நன்றி விசுவாசத்தையும், அவர்களது செல்வப் பெருக்கையும், அப்போதைய மாறுபட்ட அமோகமான வாழ்க்கையையும் கண்டு அளவுகடந்த ஆனந்தமும், பூரிப்பும் அடைந்து ஆனந்த பாஷ்பம் சொரிந்து அபாரமான அன்பும் . உருக்கமும் தோற்றுவித்த குரலில் அத்தப் புருஷரை நோக்கி, ‘ஐயா கனவானே! நானோ உலகைத் துறந்த ஏழைப் பரதேசி; எனக்கு இவ்வித மரியாதைகளும், வரிசைகளும் எதற்காக? நீங்கள் இருவரும் என்னிடத்தில் வைத்துள்ள அளவற்ற அன்பைக் கண்டும், உங்களை எம்பெருமான் மேலான நிலைமைக்குக்