பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 105

கொண்டு வந்திருப்பதை உணர்ந்தும், நான் அடையும் ஆனந்தம் என் மனசில் அடங்காமல் பொங்குகிறது. உங்கள் இருவருடைய உத்தமமான குணங்களுக்கும், நீங்கள் ஆதியில் அடைந்த மகா கொடுமையான தீமைகளுக்கும் தகுந்தபடி பகவான் உங்களுக்கு இப்போது சன்மானம் அளித்துவிட்டாரென்றே நான் நினைக் கிறேன். இன்னமும் அவனுடைய பேரருளால் உங்களுக்கு மேன்மேலும் செல்வமும் புகழும் அதிகரிக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இப்போது குறித்த சில விஷயங் களைப்பற்றி நான் தனியாக உங்களுடன் பேச விரும்புகிறேன். அதற்கு நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட வீரம்மாளும் அவளது புருஷரும் உடனே தமது ஸ்ாரட்டு வண்டியை வருவித்து, அதில் சாமியார் இருவரையும் உட்காரவைத்து மேள வாத்தியம் எடுபிடி சாமறை களுடன் அழைத்துக் கொண்டு, ஒர் அரசனது அரண்மனையைப் போலிருந்த அவர்களது மாளிகைக்குச் சென்று, மற்றவர் அனைவரையும் அனுப்பிவிட்டு, தனியான ஒரிடத்தில் சாமியார்கள் இருவரையும் அழைத்துப்போய் உன்னதமான இரண்டு பீடங்களில் அமரச்செய்து அவர்களுக்கு இருபுறங்களிலும் பயபக்தி விநயத்தோடு நின்று விசிறி தாங்கி வீசலாயினர்.

உடனே திவான் சாமியார் பேசத் தொடங்கி, “ஐயா! கனவானே! நான் சில காரணங்களை முன்னிட்டு என் பழைய ஸ்தானத்தைத் துறந்து சந்நியாசியாய் மாறி, நான் இன்னா னென்பது எவருக்கும் தெரியாமல் இருந்து வருகிறேன். நான் இறந்து போய்விட்டதாகவே எல்லோரும் நினைத்திருக்கிறார்கள். இந்த இடமோ திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு நிரம்பவும் சமீபத்தில் இருக்கிறது. நான் இன்னான் என்பதும் நான் உயிருட னிருக்கிறேன் என்பதும் ஜனங்களுக்குத் தெரிந்தால், அது வெகு சீக்கிரம் திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்குள் பரவிவிடும். அங்குள்ளோர் என்னைத் தேடப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவார்கள். பிறகு என்னுடைய நிலைமை நிரம்பவும் விகாரமானதாகிவிடும். ஆகையால், நான் இன்னான் என்பதையும், என்னுடைய பழைய வரலாற்றையும் நீங்கள் எவரிடத்திலும் வெளியிடாமலிருக்கக் கோருகிறேன். நான் போன பிற்பாடு