பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 செளந்தர கோகிலம்

இனி என்றைக்கும் நீங்கள் யாரிடத்திலும், நான் உயிரோடிருக் கிறேனென்ற சங்கதியைச் சொல்லாமலிருக்கும்படியும் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த உதவியை எனக்கு நீங்கள் அவசியம் செய்தே தீரவேண்டும். அதுவுமன்றி, நான் இன்னொரு விஷயத்திற்கு முன் நாம் சத்திரத்திற்கெதிரிலுள்ள மண்டபத் திலிருந்த சமயத்தில், இந்த அம்மாள், என்னுடைய சம்சாரம் இங்கிருந்து புறப்பட்டு வந்த பிறகு என்னைச் சந்தித்ததுண்டா வென்று கேட்டார்கள். என் சம்சாரம் இந்த ஊருக்கு எப்போது வந்திருந்தாள், என்ன காரியமாக வந்திருந்தாள் என்பதையும் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

உடனே வீரம்மாள் மிகந்த வியப்பும், கலக்கமும் அடைந்து ‘அப்படியானால், தாங்கள் அந்த அம்மாளைத் திருவட மருதூருக்கு அனுப்பிய பிற்பாடு அவர்களை இதுவரையில் தாங்கள் சந்திக்கவே இல்லையா,” என்றாள். திவான் சாமியார், “இல்லை” என்றார். வீரம்மாள், ஐயோ பாவம்: அதற்குப் பிறகு இப்போது சுமார் ஆறு, ஏழு வருஷ காலம் கழிந்திருக்கும் போலிருக்கிறதே! தங்களை அவர்கள் எங்கெங்கும் தேடியலைந்தார்களோ, முடிவில், அவர்கள் தற்கொலைதான் செய்துகொண்டிருப்பார் களோ என்னவோ தெரியவில்லையே! என்று நிரம்பவும் கலங்கிய மனத்துடன் கூறினாள்.

அதைக்கேட்ட திவான் சாமியாரது மனதும் பெருத்த கலவரங்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமது மனையாள் துன்மார்க்கமான எண்ணத்துடன் எவருடனோ ஒடிப் போயிருக் கலாம் என்று தாம் தீர்மானித்து அவள்மீது வெறுப்பும் கோபமும் அடைந்திருக்க அவள் திருவடமருதூரிலிருந்து காணாமல் போன பிறகும் தம்மைத் தேடியலைந்தாள் என்பது தமது ஹேவியம் முழுதும் தப்பானதென்று மறுப்பதாக இருந்தது. ஆகவே, திவான் சாமியார் காந்திமதியம்மாளின்மீது வைத்திருந்த பழைய பிரேமையும் பாசமும் காட்டாற்று வெள்ளம்போல மறுபடி. பொங்கியெழுந்து அவரை வதைக்கத் தொடங்கின. அன்று மாலையில் தாம் சுவாமி தரிசனம் செய்த காலத்தில் கடவுள் அசரீரி வாக்குக் கொடுத்ததாய்த் தாம் நினைத்ததற்குத் தகுந்தபடி,