பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது +OS

உள்ளுக்குள் நரக வேதனை அடைந்தவர்களாய், எங்களுடைய பொழுதைப் போக்கினோம். கடைசியில் ஒரு நடை திருவட மருதூருக்குப் போய் விசாரித்துப் பார்த்துவிட்டு வரலாமென்று நாங்கள் நினைத்துப் பிரயாணம் புறப்பட்டு அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது வழியில் மதுரையில் ஒரு சத்திரத்தில் வந்து தங்கினோம். சத்திரத்துத் திண்ணையில் தங்களுடைய தேவியார் மகா அலங்கோலமான தோற்றத்தோடு விசனமே வடிவெடுத்ததுபோல உட்கார்ந்திருந்தார்கள். தங்கள் குழந்தையும் அம்மாளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது. அதுவும் விசனகரமாகவே இருந்தது. அதுவும் சுகக் குறை வினாலும், அலைச்சலினாலும் கருத்து மெலிந்து பார்ப்பதற்கு அகோரமாக மாறிப் போயிருந்தது. இருவரும் இடுப்பில் அழுக்கடைந்து கிழிந்து போன ஆடைகளுடன் காணப்பட்டனர். முதலில் கொஞ்சநேரம் வரையில் அவர்களுடைய அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து அவர்கள்தானென்று நான் நிச்சயப்படுத்திக் கொண்டேன். அப்போது என் மனசில் பொங்கியெழுந்த ஆநந்தத்தையும் பூரிப்பையும் நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! நான் உடனே என்னை மறந்து, ‘அம்மா என் தாயே! நீங்கள் கடைசியில் இங்கேயா இருக்கிறீர்கள்! உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கவும் கடவுள் திருவுள்ளம் பற்றினாரா’ என்று கேட்டுக் கொண்டே ஓடி, அவர்களுக்கு முன்னால் போய் விழுந்தேன். என் புருஷரும் கூடவே வந்தார். அப்படிப்பட்ட சந்திப்பு ஏற்படுமென்று நம் அம்மாள் எதிர்பார்த்தவர்களேயன்று. ஆகையால் அவர்கள் எங்களைக் கண்டு திடுக்கிட்டுப் போய், அடையாளம் காணமாட்டாமல் கொஞ்சநேரம் விழித்துவிட்டு கடைசியில், “ஒகோ வீரம்மாளா வா அம்மா! எங்கே இருந்து வருகிறாய்! rேமமாயிருக்கிறாயா!’ என்று மிகுந்த வாஞ்சை யோடு விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் தங்களுடைய செய்தியைச் சொல்லவில்லை. அது எனக்குத் தெரியாதென்று நினைத்து, அதை ஏன் சொல்லி எங்கள் மனசைப் புண்படுத்த வேண்டுமென்ற நினைவினால் அதைச் சொல்லவில்லை. நான் அந்தச் சமயத்தில் என்னுடைய அதிர்ஷ்டப்