பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.4 செளந்தர கோகிலம்

கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்களோ தெரியவில்லை. என்றாளாம். அதைக்கேட்ட அம்மாள் பிரமாதமான கிலியும் நடுக்கமும் கொண்டு அவளை நோக்கி, மற்ற சங்கதிகளையும் சொல்லுங்களம்மா! பரவாயில்லை. நான் யாரிடத்திலும் வெளியிட மாட்டேன். நீங்கள் பயப்படாமல் சொல்லலாம். இன்னம் ஏதோ விபரீதமான செய்தி இருக்கிறதென்று நீங்கள் சொன்னது முதல் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்து என் மனசை வதைக்கிறது. எல்லாவற்றையும் சொல்லுங்கள். நான் தான் இங்கேயுள்ள எவரிடத்திலும் இந்த விஷயத்தை வெளியிடுவதில்லையென்று பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேனே” என்று சொன்னார் களாம். உடனே அந்த அம்மாள், ‘அந்த அக்கிரமத்தை வாயில் வைத்து எப்படிச் சொல்லுகிறதென்று நான் தயங்குகிறேன். சொல்லாமல் இருக்கவும் கூடவில்லை. இவர்கள் உங்களை இனி ஊருக்கே அனுப்பப் போகிறதில்லையாம்; இங்கேயே எப்போதும் வைத்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டார்களாம். திருவனந்த புரத்தில் உங்கள் வீட்டில் முத்துச்சாமி என்று ஒரு சமையல்காரன் இருக்கிறானாம். அவனுக்கு ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அவனைச் சரிப்படுத்தி அவனைக் கொண்டு உங்கள் புருஷருக்கு விஷம் வைத்துக் கொன்றுவிடும்படி ஏற்பாடாயிருக்கிறதாம். அது அநேகமாய் இன்றைக்கே தீர்ந்து போயிருக்குமாம்; அந்தக் காரியம் முடிந்துபோனால் நீங்கள் அங்கே போகவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடுமல்லவா. அது மாத்திரமல்ல, நீங்கள் இங்கே இன்னம் கொஞ்ச காலம் இருந்தபிறகு, உங்க ளுடைய குழந்தையையும் கொன்று போட்டுவிட ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. பெரியவர் உங்கள் பேரில் கொண் டிருக்கும் மோகம் சொல்லில் அடங்காது. உங்கள் புருஷ ருடையவும் பிள்ளையுடையவும் இடைஞ்சல் இல்லாமல் உங்களை ஏதேச்சையாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கவேண்டுமென்பது இவர்களுடைய தீர்மானம். அதற்காகவே இந்த ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் சில தினங்களுக்கு முன் நீளமான கடிதம் எழுதியதெல்லாம் உங்கள் புருஷரை நம்பவைத்து கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமின்றி