பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 115

காரியத்தை முடிக்க வேண்டுமென்னும் உத்தேசத்துடனேதான். இவ்வளவுதான் சங்கதி” என்றாளாம். அந்த மகா பயங்கரமான செய்தியைக் கேட்டவுடன் நம் அம்மாளுடைய மனசு எப்படி இருந்திருக்குமென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அத்தனை விஷயங்களையும் அவள் கட்டுப்பாடாகவும் அபாண்ட மாகவும் உற்பத்தி பண்ணிச் சொல்ல வேண்டிய முகாந்தரமே இல்லை. ஆகையால், அவள் சொன்னதையெல்லாம், நம் அம்மாள் உண்மையென்றே நம்பிவிட்டார்கள். அப்போது அவர்களுடைய உயிர் போய்விட்ட மாதிரியே இருந்ததாம். பெரியவர் அன்றைய தினம் இரவில் செய்ய உத்தேசித்திருந்த தாகச் சொன்ன காரியங்கூட அவ்வளவாக அவர்களது மனத்தை வதைக்கவில்லையாம். தங்களையும், குழந்தையையும் கொல்ல ஏற்பாடாயிருக்கிறதென்கிற செய்தியைக் கேட்கவே, அவர்களு டைய தேகம் துடிதுடித்துப் பறந்ததாம். அவர்களுடைய மனசில் அபாரமான துக்கமும், கலக்கமும் திகிலும் எழுந்து சகிக்கமுடியாத வேதனையையும் சஞ்சலத்தையும் உண்டாக்கி விட்டனவாம். திடீரென்று தலையில் ஒரு பெருத்த செம்மட்டி யால் அடித்துவிட்டால், எவ்வாறு பொறி கலங்கிப் போகுமோ அதுபோல ஆய்விட்டதாம். அந்தச் சமயத்தில் தாம் என்ன செய்வது, யாரிடம் போவது என்பது தெரியவில்லையாம். அந்த வீட்டில் இருப்பதும், பெரியவரைப் பார்ப்பதும், அப்பேர்ப்பட்ட விபரீதமான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியவர் குழந்தையிடத்திலும் அவர்களிடத்திலும் நிரம்பவும் வாஞ்சை யாகப் பேசியதைக் கேட்பதும் அவர்களுக்குப் பெருத்த நரக வேதனையாக இருந்தனவாம். அதுவும் தவிர அவர்களுக்குத் திருவனந்தபுரம் நினைவே நினைவாக இருந்ததாம். அந்நேரம் முத்துசாமி தங்களுக்கு விஷம் போட்டிருப்பானோ, தாங்கள் உயிருடன் இருக்கிறீர்களோ இல்லையோ என்ற சந்தேகம் அவர்களுடைய உயிரையே வாட்டி வருத்திவிட்டதாம். அவர்கள் உடனே பறந்து திருவனந்தபுரத்துக்கு வந்துவிடலாமோ என்று நினைத்தார்களாம். அத்தகைய மகா விபரீத நிலைமையிலிருந்து நம் அம்மாள் தவசிப் பிள்ளையின் சம்சாரத்தைப் பார்த்து, “அம்மா இப்பேர்ப்பட்ட கொடிய சதியாலோசனை நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள்