பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 16 செளந்தர கோகிலம்

கொஞ்சமும் சந்தேகம் கொள்ளவில்லை. நல்ல வேளையாக நீங்கள் சமயத்தில் இதை எனக்குத் தெரிவித்தீர்களே! இப்பேர்ப் பட்ட மகா பெரிய உதவி செய்த உங்களை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன். நான் உடனே திருவனந்தபுரம் போகவேண்டும். இவர்களிடம் சொன்னால், இவர்கள் அனுப்பவும் மாட்டார்கள் அதன் காரணமென்னவென்றும் கேட்பார்கள். ஆகையால், நானும் பையனும் படுத்துத் துரங்குவதுபோலக் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எவருக்கும் தெரியாமல் எழுந்து வெளியில்போய் விடுகிறோம்” என்றார்களாம். உடனே அந்த அம்மாள், “ஆம், அதுதான் நல்ல காரியம்; அப்படியே செய்யுங்கள். ஆனால் நீங்கள் இன்னொரு காரியம் செய்யுங்கள். இங்கிருந்து நேரில் ரயிலில் போனால், இவர்கள் ஆள்களை அனுப்பி அல்லது ரயில்வே போலீசாருக்குத் தந்திகள் அனுப்பி உங்களை நிறுத்த வழி தேடுவார்கள். ஆகையால் நீங்கள் ரயிலடிக்குப் போய் அங்கே இருக்கும் குதிரை வண்டிகளில் ஒன்றை அமர்த்திக்கொண்டு, ரஸ்தாவோடு கும்பகோணம் போங்கள். அங்கிருந்து வேறொரு வண்டி வைத்துக்கொண்டு தஞ்சாவூருக்குப் போங்கள். இப்படியே இரண்டு மூன்று தினங்கள் வரையில் ரயிலில் ஏறாமல், குதிரை வண்டியிலேயே பாதி வழி தூரம் போய், அதன்பிறகு ரயிலில் ஏறிப்போய்ச் சேருங்கள். அதுவரையில், அங்கேயும் கெடுதல் நடந்திருக்காது; நீங்கள் போய் நேரில் உங்கள் புருஷரை எச்சரிக்கலாம்” என்றாளாம். அதைக் கேட்ட அம்மாள் அப்படியே செய்வதாய் ஒப்புக்கொண்டு தமது குழந்தையைத் தனியாக அழைத்து அந்தச் செய்தியையும், தாம் செய்ய உத்தேசித்திருந்த காரியத்தையும் சொன்னார்களாம். குழந்தைக்கும் உடனே பெருத்த திகில் உண்டாகிவிட்டதாம். அவர்கள் இருவரும் படுத்துக் கொள்வதாய்க் காட்டி சுமார் ஒன்பது மணிக்குப் புறப்பட்டு எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் வண்டியமர்த்திக் கொண்டு கும்ப கோணத்துக்கு வந்து, அன்றைய இரவு அவ்விடத்தில் இருந்து, விடியற்காலையில் மறுபடி வண்டியேறித் தஞ்சாவூரை அடைந்து, அவ்விடத்திலிருந்து திருச்சினாப் பள்ளிக்கு வந்தார்களாம்” என்று நிறுத்தினாள்.