பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 117

அந்த வரலாற்றைக் கேட்ட திவான் சாமியார் முற்றிலும் பிரமித்து ஸ்தம்பித்துப் போய் அபாரமான மனக்கலக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் அடைந்து, ‘ஆ அப்படியா சங்கதி அந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டதனாலா அவள் புறப்பட்டு போய்விட்டாள். அப்படியானால் அவள் பேரில் யாதொரு குற்றமுமில்லை. அவள்மேல் நான் விபரீதமான சந்தேகங்களையெல்லாம் கொண்டது பெருத்த தவறு. அவள் விஷயத்தில் நான் தகாத சந்தேகங்களையெல்லாம் கொண்டு பெருத்த பாதகம் செய்துவிட்டேன். அதன்பிறகு அவள் திருச்சினாப்பள்ளியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்தாள் போலிருக்கிறது. அதற்குள் நான் புலியினால் அடிபட்டு இறந்து போனதாகக் கேள்வியுற்றாள் போலிருக்கிறது. அதன்மேல் என்ன செய்தாள்? இப்போது அவளும் குழந்தையும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா!” என்று மிகுந்த தவிப்போடும் ஆவலோடும் வினவினார்.

வீரம்மாள், ‘அவர்கள் திருவனந்தபுரத்திற்கு வரவில்லை; அதற்குக் கொஞ்ச தூரத்திற்கு இப்பால் வந்தபோதே தங்களைப் பற்றிய சங்கதி எட்டிவிட்டதாம். அதைக் கேட்டவுடனே அவர்களும் குழந்தையும் மோதிக் கொண்டார்களாம், அடித்துக் கொண்டார்களாம். கீழே விழுந்து புரண்டு அழுது புலம்பினார் களாம், முதலில் திருவனந்தபுரத்துக்குப் போக எண்ணினார்களாம். அங்கே பெரியவர் வந்திருப்பார் என்று நினைத்து பயந்து அங்கே வரவில்லையாம். அவர்கள் தங்களை இன்னார் என்று வெளி யிடாமல் சநிதொடர்மங்கலம் முதலிய இடங்களுக்குப் போனார்களாம்; மோட்டார் விபத்து நடந்த இடத்துக்கும், பக்கத்திலிருந்த ஊருக்கும் போய், மாயாவிபூதிப் பரதேசியென் பவருடைய அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்களாம். அதன்மேல் தாங்கள் இறந்துபோனதே அவர்களுக்கு நம்பிக்கைப்படவில்லையாம். மாயாவிபூதிப் பரதேசி என்பவர்தான் தாங்களாக இருக்கவேண்டுமென்று அவர்கள் சந்தேகங்கொண்டு எத்தனை வருஷமானாலும் அவரைக் கண்டுபிடிக்கிறது, முடியாவிட்டால் குழந்தையும் தாமும் கிணற்றில் குளத்தில் விழுந்து இறந்த போகிறதே முடிவென்று தீர்மானித்துக்கொண்டு, பரதேசி பண்டாரங்கள் முதலியோர்