பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 செளந்தர கோகிலம்

எந்தெந்த rேத்திரங்களில் இருப்பார்களோ அங்கெல்லாம், தாம் போய்த் தேடுவதென்று தீர்மானித்துக்கொண்டு, தமது உடம்பில் இருந்த நகைகளையெல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொண்டு கந்தைத் துணியை உடுத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான ஊர்களுக் கெல்லாம் பையனையும் அழைத்துக்கொண்டு நடந்துபோய்த் தேடினார்களாம். எங்கேயும் தாங்கள் அகப்படவில்லை. அவர்களுடைய நம்பிக்கையும், ஊக்கமும் குறைய ஆரம்பித்தன. தளர்ச்சியும் களைப்பும் மேலாடி இனி தங்களைக் காண முடியாது என்ற எண்ணமே கிளம்பியது. அந்த நிலைமையில் அவர்கள் வந்து அந்தச் சத்திரத்தில் உட்கார்ந்திருந்தார்களாம். எங்களைக் கண்டதில், அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் உண்டானது. ஆனாலும், தங்களைப் பற்றிய ஏக்கமும், தாங்கள் இறந்துபோகவில்லையென்ற எண்ணமும் மாறவில்லை. எங்கள் ஊரில் அடிக்கடி ஏராளமான பரதேசிகள் வருவார்களென்றும், இங்கே வந்திருந்தால், எப்படியும் தங்களைக் கண்டுபிடித்து விடலாமென்றும் சொல்லி அவர்களைத் தேற்றி நாங்கள் அவர்களைத் திருச்செந்தூருக்கு அழைத்து வந்து ஒரு மாச காலம் வைத்திருந்தோம். அவர்கள் இருவரும் எங்கள் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு மூன்று நாளைக்கொருதரம் சாப்பிடுவதுகூட அரிது. தங்களைப் பற்றிய ஏக்கமும் நினைவுமே அவர்களுடைய மூச்சுக் காற்றாக இருந்து வந்தனவென்று சொல்ல வேண்டும். எங்கள் ஊரிலும், இன்னம் பல ஊர்களிலும் ஆள்களை வைத்துத் தங்களைத் தேடினோம். தாங்கள் அகப்படவில்லை. அம்மாளும் குழந்தையும் தங்களைக் காணாமல் இருக்க மாட்டோமென்று சொல்லி, இன்னும் தூரத்திலுள்ள ஜில்லாக்களிலெல்லாம் தாம் போய்த் தேடிப்பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள், தாங்கள் அகப்பட்டால் தகவல் தெரிவிப்பதாக மாத்திரம் சொல்லிவிட்டுப் போனார்கள். இதுவரையில் அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கிக் கிடந்தோம். தங்கள் பெயரை வைத்துப் பல இடங்களில் சத்திரங்களைக் கட்டினோம், வந்த பரதேசிகளை போஷிக்கவும், மாயாவிபூதிப் பரதேசியைக் கண்டுபிடிக்கவும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆறு ஏழு வருஷம் பாடுபட்டும்