பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது iS

பலன் ஏற்படவில்லை. நாங்கள் தளர்வடைந்து ஒய்ந்து போய் விட்டோம். இந்த நிலைமையில் தாங்கள், இன்று வந்து எங்களுக்குத் தரிசனம் கொடுத்தீர்கள். இப்போது அம்மாளும் குழந்தையும் இல்லையே என்ற விசனம் அபாரமாகப் பொங்கி யெழுகிறது. தெய்வம் அவர்களை உயிரோடு வைத்திருக்கிறதோ இல்லையோ என்பதும் தெரியவில்லை, இடையில் தங்கள் தகப்பனாரைப் பற்றிய விளம்பரம் ஒன்று இந்த ஊர் கிராம முனிசிப்புக்கு வந்ததாம். அதன் விவரத்தைக் கேள்வியுற்றோம். அவர்களுக்கு எவ்விதத் தகவலும் கொடுக்க எங்களுக்கு இஷ்ட மில்லை. நாம் அம்மாளைப் பற்றிய தகவலை அவருக்குத் தெரிவிக்க வேண்டியதும் அவசியமாகத் தோன்றவில்லை. ஆகையால், நாங்கள் பேசாமல் இருந்துவிட்டோம்” என்று கூறி முடித்தாள்.

அந்த மகா விசனகரமான வரலாற்றைக் கேட்ட திவான் சாமியாரது மனம் சகிக்க இயலாத சஞ்சலமும் வேதனையும் அடைந்து உருகிப் போய்விட்டது. விசனமும் அழுகையும் பொங்கி யெழுந்தன. அவர் தமக்குத் தாமே, “ஐயோ காந்திமதி: அப்பா என் செல்வனே. உங்கள் இருவருக்கும் என்ன கஷ்ட காலம் வந்து விட்டதையோ இந்த ஏழு வருஷ காலத்தில் நான் அடைந்த விசனத்தையும் துன்பங்களையும்விட, அதிகமாய் நீங்கள் இருவரும் அடைந்திருப்பதைக் கேட்கும்போதே என் மனம் பதைக்கிறதே! ஐயோ! எவ்வளவு அபாரமான செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்த நீங்கள், யாதொரு குற்றமும் செய்யாமல், என்னென்ன கஷ்டங்களுக்கும், இழிவுக்கும், இல்லாக் கொடுமைக்கும் இலக்காய் உழல நேர்ந்து விட்டதே! என்னிடத் திலாவது ஏராளமான பணம் இருந்தது. நான் உலகைத் துறந்து சந்நியாசிக் கோலம் பூண்டிருந்தாலும், என்னிடம் அந்தப் பணம் இருந்ததும் ஒரு விதத்தில் மனசிற்குத் தைரியமாக இருந்தது. நீங்கள் சந்நியாசியுமில்லை. கையில் பணமுமில்லை. இல்லா விட்டாலும் யாரிடத்திலும் கேட்கவும் உங்களுக்குத் தெரியாது. ஆகா! என்ன கொடுமை! என்ன கொடுமை!’ என்று எண்ண மிட்டு உருகியவராய் வீரம்மாளை நோக்கி, ‘ஏனம்மா! கடைசியாக அவர்கள் உங்களை விட்டுப்போன காலத்தில்