பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2O செளந்தர கோகிலம்

அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்திருக்கலாம்?’ என்றார். வீரம்மாள், “அவர்கள் திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்பட்டு வந்த காலத்தில் உயர்வான நகைகளையெல்லாம் கழற்றி வைத்து விட்டு, காதில் சிவப்புக் கம்மல், கையில் சில வளையல்கள் முதலியவைகள் மாத்திரம் போட்டுக் கொண்டு வந்தார்களாம். அவைகளை விற்றதில் ரூபாய் ஐந்நூறு தேறியதாம். தாங்கள் செலவுக்காக இருக்கட்டுமென்று அம்மாளுடைய பெட்டியில் ஆயிரம் ரூபாய் வைத்திருந்தீர்களாம். அந்தப் பணத்தில் அவர்கள் சுமார் இருநூறு முன்னுாறுக்குமேல் செலவு செய்துவிட்டு பாக்கியை வைத்திருந்தார்கள். அவர்கள் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபொழுது நான் ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தேன். தங்களுடைய கையிலிருக்கும் பணத்தை வைத்துக் காப்பாற்றுவதே கடினமாய் இருக்கிற தென்றும், அது செலவழிந்துபோன பிறகு எங்களுக்கு எழுதிப் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லிவிட்டுப் போனார்கள். அதன் பிறகு பணத்துக்குக்கூட அவர்கள் எழுதவில்லை’ என்றாள்.

திவான் சாமியார் மிகுந்த ஏக்கமும் துக்கமும் கொண்டு, ‘ஆயிரத்து இருநூறு ரூபாய் ஆறு வருஷத்திற்கு வரவா போகிறது. அநேகமாய் அவர்கள் இறந்துதான் போயிருக்க வேண்டும். அதனால்தான் நான் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரத்திற்கும் பதில் இல்லை. ஈசா இதுவும் ஒருவிதமான ஜாதக விசேஷமா எவ்வளவோ அமோகமாக இருந்த எங்கள் வாழ்வு சீர்குலைந்து போகவும், நான் இப்படித் திண்டாடவும், அவர்கள் அப்படி ஊரூராய் அலைந்து இறக்கவும், என் தகப்ப னாருடைய வாழ்வு இன்னொரு மாதிரியாக அலங்கோலப்படவும், அடடா என்ன கதி நேர்ந்துவிட்டது! ஐயோ! அவர்களை நினைக்க நினைக்க என் மனம் பதறுகிறதே! என் உயிர் தள்ளாடுகிறதே ஆகா! மகா நுட்பமாகவும் செல்வமாகவும் வளர்க்கப்பட்ட அறியாத பச்சைக் குழந்தை இந்த வயசில் இப்பேர்ப்பட்ட சங்கடங்களை அநுபவித்துத் தாயோடுகூட ஊரூராய் அலைந்து பட்டினி கிடந்து கந்தையை உடுத்தி சத்திரத் திண்ணைகளில் படுத்து உழலவா ஈசன் தலையில் எழுதினான்! அடடா ஆகா! நான் என்ன செய்வேன் என் தலை சுற்றுகிறதே!