பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் புனம்பழம் வீழ்ந்தது 121

அறிவு பிறழ்கிறதே! இனி நான் இந்த உலகத்தில் உயிரோடு திரிந்துதான் என்ன செய்யப் போகிறேன்! என்னால் ஒருவருக்கும் உபயோகமில்லை; என்னை நம்பிய என் சம்சாரம் குழந்தை முதலியோருக்கும் உபயோகமில்லை; மற்ற ஜனங்களுக்கும் உபயோகமில்லை. ஆனால், என் தந்தை ஒருவர் இருக்கிறார். அவருடைய நிலைமையை நினைத்தால்தான், நான் கொஞ்சம் பொறுமை பாராட்ட வேண்டியிருக்கிறது. அந்தத் தவசிப் பிள்ளையின் சம்சாரம் சொன்னதெல்லாம் முழு வஞ்சகமான சங்கதியேயன்றி வேறல்ல. என் தந்தையின் மேன்மையான குணமென்ன, மாசற்ற ஒழுக்கமென்ன, தெய்வபக்தியென்ன! சேச்சே! அவர் இப்பேர்ப்பட்ட பஞ்சமா பாதகத்தை மனசாலும் நினைப்பாரா! ஒரு நாளும் இராது. முத்துசாமி எனக்கு விஷம் வைத்த காலத்தில் சொன்ன வரலாறும் அவள் சொன்ன வரலாறும் வேறாக இருப்பதிலிருந்தே, காந்திமதியும் சரி, கிழவரும் சரி, இருவரும் குற்றமற்றவர்களென்று நிச்சயிக்கலாம். தங்களுடைய பெண்ணைப் பெரியவருக்குக் கட்டிக்கொடுத்து, சொத்துகளை அபகரிக்க வேண்டுமென்று அவர்கள் சதியா லோசனை செய்து இத்தனை காரியங்களையும் நடத்தி இருக்கிறார்களென்பது நன்றாகத் தெரிகிறது. என்னை மாத்திரம் கொன்றுவிடவேண்டுமென்பது அவர்களுடைய கருத்து. என் சம்சாரத்தையும், குழந்தையையும் கொன்றால் இந்த மூன்று சாவையும் தாங்கமாட்டாமல் பெரியவர் இறந்துபோய் விடுவார் என்று நினைத்தோ அல்லது ஊராரும் என் தகப்பனாரும் அவர்கள் பேரில் சந்தேகங்கொள்வார்கள் என்று பயந்தோ, அவர்கள் இருவரையும் வீட்டைவிட்டு இப்படித் தந்திரமாகக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. என் சம்சாரம் எவருக்கும் தெரியாதபடி வீட்டைவிட்டு ஒடிப் போனபடியால், மறுபடியும் திரும்பிவர முகமிராதென்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். எப்படியோ நாலைந்து மனிதர்கள் சேர்ந்து சதியாலோசனை செய்து, எங்கள் குடும்பத்தை அடியோடு கவிழ்த்துச் சீர்குலைத்து, அது அழிந்துபோகும்படி செய்து விட்டார்கள். அவர்களுடைய எண்ணத்திற்கு அநுகூலமாக எங்கள் எல்லோருடைய கெட்ட தசையும் வந்து நேர்ந்து கொண்டிருக்கிறது. இறந்துபோய்க் காஷ்டத்தில் வைத்துக்