பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 செளந்தர கோகிலம்

கொளுத்தப்பட்ட என் தந்தை பிழைத்துக் கொண்டு என் திருஷ்டியில் பட்டதுபோல, செந்திலெம்பெருமான் செயலாலும் எங்களெல்லோருடைய கெட்ட காலமுடிவின் பயனாகவும் அவர்களாக இனி என் கண்ணில்பட்டால்தான் உண்டு. இல்லை யானால், நான் அவர்களை எங்கே போய்த் தேடுகிறது. இப்போது யோசித்துப் பார்க்க, இத்தனை பெரிய அக்கிரமச் செய்கைகளையும் துணிந்து செய்ய எத்தனித்தவர்கள், பெரியவர் மார்படைப்பினால் மயங்கி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை வைத்துக் கொளுத்திவிட்டு வந்தாலும் வந்திருக்கலாமென்று எண்ணவேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்கள் விளம்பரங்களைப் பார்த்தும் பார்க்காதவர்கள் போல எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கொடிய சர்ப்பங்களைத் தேடிப்பிடித்துக் கிழவரை அவர்களுடைய சவரக்ஷணையில் வைப்பது முற்றிலும் அபாயகரமானது என்றே படுகிறது. ஆனால் ஒரு வேளை அந்தக் கமலவல்லிக்கு மாத்திரம் தன் புருஷரிடம் அந்தரங்கமான பிரியம் இருக்குமோ என்னவோ! இருந்தால், அவள் மாத்திரமாவது தன் புருஷரிடம் மறுபடி வந்து சேர்ந்திருப்பாளல்லவா! அவளும் மற்றவர்களுடைய வஞ்சக வலைக்கும், போதனைக்கும் உட்பட்டவளாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது நான் திருவையாற்றுக்குப் போய் இதை யெல்லாம் பெரியவரிடம் தெரிவித்தால், தம்மாலேயே இவ்வளவு அலங்கோலமும் நடந்துவிட்டதாவென்ற துக்கத்தினாலும் மன அதிர்ச்சியினாலும் உயிரைவிட்டு விடுவார். இதையெல்லாம் அவர்களிடம் சொல்வதில் கெடுதல் உண்டாகுமே யன்றி நன்மை உண்டாகப் போவதில்லை. ஆகையால் அவரிடம் எந்தச் சங்கதியையும் சொல்லாமல் இருந்துவிடுவதே நல்ல காரியம்’ என்று தமக்குள் எண்ணமிட்டவராய்ச் சிறிது நேரம் ஒய்ந்திருந்த பின் வீரம்மாளை நோக்கி, “அம்மா தாயே! நீங்கள் இருவரும் நல்ல உத்தமமான சதிபதிகள். உப்பிட்டவரை உள்ளமட்டும் நினை என்ற பழமொழிக்கிணங்க, நீங்கள் எங்கள் விஷயத்தில் நிரம்பவும் நன்றி விசுவாசம் பாராட்டி எங்களுடைய கஷ்ட காலத்தில் உங்களாலான உதவிகளைச் செய்ய முயற்சித்தீர்கள். எங்களுடைய கிரகசாரம் எங்களிடத்திலிருந்த அபாரமான செல்வம், செல்வாக்கு, உயர்ந்த பதவி, rேமமான குடும்ப வாழ்க்கை முதலியவைகளை