பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 123

யெல்லாம் அழித்து இல்லாமல் செய்திருக்கிறது. அதன் கொடுங் கோலுக்கு முன், உங்களைப் போன்றவர்களுடைய ஜீவகாருண்ய மெல்லாம் எம்மாத்திரம். உங்களுடைய பொருளுதவி, அநுதாபம், துயரம், தேக உதவி முதலிய எதுவும் எங்களுக்கு இந்தச் சமயத்தில் ஒட்டாது. சேருகிற காலத்தில் எல்லாம் சேரும்; போகிற காலத்தில் எதுவும் ஒட்டாது. ஆகையால் நீங்கள் காந்திமதி உங்கள் சொற்படி எதையும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாவது, இப்போது நான் உங்களுடைய சம்பாவனையை ஒப்புக் கொள்ள வில்லை என்றாவது மனவருத்தம் பாராட்ட வேண்டாம். நான் முதலில் உங்களிடம் வேண்டிக்கொண்ட அந்த உதவியை மாத்திரம் நீங்கள் செய்ய வேண்டுமாய் நான் இன்னொரு தடவை கேட்டுக் கொள்ளுகிறேன். நான் இந்த ஊருக்கு வந்ததற்கு, முதலாவது செந்திலெம்பெருமான் தரிசனம் பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்தேன். இரண்டாவது, உத்தமகுண சதிபதிகளான உங்களைக் கண்டு உங்களுடைய rேமத்தையும் அபிவிருத்தியையும் பார்த்து பரம சந்தோஷம் அடைகிறேன். மூன்றாவது, என் சம்சாரத்தைப் பற்றி நான் தவறாக நினைத் திருந்த களங்கம் விலகியது. இத்தனை பெரிய நன்மைகளை நான் அடைந்தேன். எனக்கு நீங்கள் உத்தரவு கொடுங்கள். நான் போய் வருகிறேன்” என்றார்.

அதைக்கேட்ட வீரம்மாள் கண்ணிர் விடுத்தவளாய், ‘சுவாமிகளே! தாங்கள் இந்தக் குடிசையில் இன்னம் சில தினங்கள் இருந்து போகக் கூடாதா, அடியேங்கள் அவ்வளவு பாக்கியம் பண்ணவில்லையா?” என்று நிரம்பவும் தழுதழுத்த குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட திவான் சாமியாரது மனம் இளகி உருகியது. அவர் சிறிது நேரம் யோசனை செய்து, ‘அம்மா! நற்குணவதி: பெரியவரைத் தனிமையில் திருவையாற்றில் விட்டு வந்திருக்கிறேன். நான் அதிக நாட்கள் எங்கும் தங்குகிறதில்லை. இன்றைக்கே திரும்பிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டு இங்கே வந்தோம். ஆனாலும், உங்கள் மனசைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆகையால் இன்று முழுதும் இங்கிருந்து நாளைய தினம் காலையில் நாங்கள் எழுந்து போகிறோம். இப்போது நீங்கள் அவ்வளவோடு திருப்தியடையுங்கள்’ என்றார்.