பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 127

கொடிகள் வளைவு பந்தல்களின் மேல் ஏற்றிவிடப்பட்டிருந்த இடத்திற்கு அப்பால், யாரோ இரண்டு மனிதர்கள் நின்று தணிவான குரலில் சம்பாவித்துக் கொண்டிருந்ததாக அவள் உணர்ந்தாள். உணரவே, அவள் திடுக்கிட்டு அஞ்சி நடுங்கி, அந்த அகாலத்தில் தோட்டத்திற்குள் வந்து யார் சம்பாஷித்துக் கொண்டிருப்பார்களென்று நினைத்து ஆச்சரியம் அடைந்தவளாய், தான் அப்பொழுது குதித்தால், அதனால் உண்டாகும் ஓசையைக் கேட்டு அங்கிருந்த மனிதர்கள் ஓடிவந்து தன்னைத் தூக்கி விடுவார்கள் என்றும், தனது தீர்மானம் அந்தக் கிணற்றண்டை நிறைவேறாதென்றும் நினைத்தாள். அதுவுமன்றி அங்கே வந்திருப்பது ஒருகால் திருடராயிருப்பாரோ என்ற சந்தேகமும் அவளது மனத்தில் தோன்றியது. ஆகையால், தான் மறைந்து சென்று அங்கு சம்பாஷித்தவர்கள் இன்னார் என்பதை அறிய வேண்டுமென்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவளாய் அந்தப் பெண்மணி கமுகு மரங்களின் இடையிலிருந்த உயரமான பூச்செடிகளின் மறைவில் ஒளிந்தொளிந்து ஒசையில்லாது நடந்து, மனிதரது பேச்சுக்குரல் உண்டான இடத்திற்கு அருகில் போய் கொத்துக்களின் இடுக்கால் உற்று நோக்கினாள். நோக்கவே, அவள் திடுக்கிட்டு அப்படியே பிரமித்து நின்றுவிட்டாள். தான் அங்கே கண்ட காட்சி உண்மையானதா அல்லது மனப்பிராந்தி யினால் ஏற்படும் பொய்த்தோற்றமா என்ற சந்தேகம் அவளது மனத்தில் உண்டாகிவிட்டது. ஏனெனில், அவ்விடத்தில் சுந்தர மூர்த்தி முதலியாரும், தனது தங்கை செளந்தரவல்லியம்மாளும் நின்று ஒருவரோடொருவர் சம்பாவித்துக் கொண்டிருந்தமையால், அதற்கு முன் ஒருவரோடொருவர் சிறிதும் பழகாதவர்களான அவர்கள் இருவரும் அந்த அகால வேளையில் தனிமையில் பூஞ்சோலைக்குள் வந்து பேசியது, அவளுக்கு முற்றிலும் ஆச்சரிய கரமாக இருந்தது. அதுவுமன்றி, அன்றைய பகல் முழுதும், தமது பங்களாவிலிருந்து இரவில் தனக்குப் பின்னால் பங்களாவிற்கு வந்து ஜனங்களோடு வெளியில் போய் விட்டவரான சுந்தர மூர்த்தி முதலியாரும், செளந்தரவல்லியும், தாம் அப்பொழுது அந்த இடத்தில் சந்திப்பதென்று ஏற்பாடு செய்துகொள்ள எப்பொழுது சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதை அறியமாட்டாத வளாய் நமது மடவன்னம் சிறிதும் ஒசை செய்யாமல் அப்படியே