பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.28 செளந்தர கோகிலம்

நின்றுவிட்டாள். அவர்கள் பேசுவதைத் தான் கவனித்துக் கேட்பது ஒழுங்கல்ல என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும், தன்னிலும் சிறியவளான செளந்தரவல்லி தவறு செய்தால், அதைப் பற்றி அவளைக் கண்டிப்பதற்கும் அல்லது அதைத் தடுப்பதற்கும் அவள் கடமைப்பட்டிருந்தாள். ஆதலால், தான் அப்படியே சிறிது நேரம் நின்று, அவர்கள் பேசியதைக் கவனிக்க வேண்டுமென்று நினைத்து ஒசை செய்யாமல் அப்படியே ஒளிந்து கொண்டு நின்றாள்.

செளந்தரவல்லியும் சுந்தரமூர்த்தி முதலியாரும் அப்பொழுது அவ்விடத்தில் வந்து சந்திக்க எப்படி சாத்தியப்பட்டது என்பதை நாம் கவனிப்போம். செளந்தரவல்லி, மிகுந்த படாடோபமும், குதுரகலமும் நிறைந்து சதாகாலமும் உல்லாஸ் புருஷராய்த் தோன்றிய சுந்தரமூர்த்தி முதலியாரைக் கண்டது முதல் அவரே. தனது மனப்போக்கிற்குத் தகுந்த புருஷரென்று மதித்து அவரிடத்தில் அளவற்ற மோகமும், பாசமும் வைத்து, எப்பாடு பட்டாயினும் தான் அவரையே மணக்க வேண்டுமென்ற தீர்மானத்தைச் செய்து கொண்டிருந்தாள். கோகிலாம்பாளும் கண்ணபிரானும் பூஞ்சோலையில் தனிமையிலிருந்ததைக் கண்டது முதல், தானும் அதுபோலத் தனது மணாளனுடன் தனிமையில் சம்பாஷித்து ஆனந்தமடைய வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டு துடித்திருந்தாள் என்பது முன்னரே கூறப்பட்ட விஷயம். ஆகவே, அந்த மடந்தை புஷ்பாவதியிடத்தில் தனிமையில் பேசி, அவளது தமயனாருடன் தான் ரகசியமாய்ப் பேசும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கெஞ்சி வேண்டிக் கொள்ள, அவள் அன்றைய தினம் இரவு பத்துமணிக்குள் அவர் எப்படியும் அவளைச் சந்திக்கும்படி தான் செய்வதாய் வாக்குறுதி செய்து கொடுத்திருந்தாள் என்பதும், அதை அவள் டெலிபோன் வாயிலாக சுந்தரமூர்த்தி முதலியாருக்குத் தெரிவித்தாள் என்பதும் முன்னரே கூறப்பட்ட விஷயங்கள். செளந்தரவல்லியும் புஷ்பா வதியும் அன்றைய மாலையில் தீர்மானித்துக் கொண்டபடியே செளந்தரவல்லி நிரம்பவும் திறமையாக நடந்துகொண்டு, தனது தாயையும், அக்காளையும் சொந்த ஜனங்களுக்கு முன்னும், வேலைக்காரர்களுக்கு முன்னும் மானபங்கப்படுத்தி விட்டு ஒன்றையும் அறியாத பேதைபோல முடிவில் அவள் அந்த மகாலை