பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 செளந்தர் கோகிலம்

பார்த்தாள். அடியில் யாருடைய பெயர் இருந்ததென்று கவனித்தாள். பெயர் காணப்படவில்லை.

அதில் அடியில் காணப்படும் வாக்கியங்கள் எழுதப்பட்டி ருந்தன:

இன்றிரவு பத்து மணிக்கு நான் உன்னைச் சந்திக்க வேண்டுமென்று நீ ஆவல் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். சிறிது நேரத்திற்கு முன் நடந்த வெட்கக் கேடான சம்பவங்களைக் கண்டபின் இந்தச் சந்திப்புக்கு என் மனம் இடம் தரவில்லை. ஆனாலும், உன்னிடம் நான் வைத்துள்ள அளவிடமுடியாத பிரியத்திற்கு முன் எதுவும் நிற்கவில்லை. உங்கள் பங்களாவில் சந்தித்தால் தாராளமாக நாம் சம்பாவிக்க முடியாது. ஆகையால், இப்போது நான் வேறொரு காரியத்தைக் கவனிக்க வேண்டுமாத லால், அங்கே போய்விட்டு மறுபடி வந்து, உங்கள் பூஞ்சோலை யில் கமுகுத் தோப்புக்குப் பக்கத்திலிருக்கும் கிணற்றண்டையுள்ள கொடிப் பந்தலிற்கப்பால் உட்கார்ந்திருக்கிறேன். நீ சரியாகப் பத்து மணிக்குப் புறப்பட்டு எவருக்கும் தெரியாமல் அங்கே வந்து சேர். மற்றவை நேரில். நான் இன்னான் என்பதை நீ யூகித்துக் கொள்வாயாகையால், நான் கையெழுத்துச் செய்யவில்லை. இந்தச் சீட்டு வேறு எவர் கண்ணிலாகிலும் பட்டால், இது இன்னாரால் இன்னாருக்கு எழுதப்பட்டதென்பதே தெரியாம விருக்க வேண்டுமென்று நான் பெயர்களைக் குறிக்கவில்லை. அதைப்பற்றி நீ வித்தியாசமாக எண்ண வேண்டாம்.

என்று எழுதப்பட்டிருந்த துண்டுக் கடிதத்தை அவள் படித்து முடித்தாள். சுந்தரமூர்த்தி முதலியார்தான் அதை எழுதியிருக்கிறா ரென்று அவள் உடனே யூகித்துக் கொண்டாள். அதை அவர் வேலைக்காரர் மூலம் அனுப்பி இருக்கமாட்டாரென்றும், மற்ற ஜனங்களோடு வெளியில் வந்தவர் தனது விடுதிக்குள் நுழைந்து அந்தக் கடிதத்தை வைத்துவிட்டுப் போயிருக்கிறாரென்றும் அவள் நிச்சயப்படுத்திக் கொண்டதன்றி, அவர் தன் மீது ஆழ்ந்த பிரியம் வைத்திருக்கிறாரென்று நினைத்துப் பூரித்து அளவளாவி அவருக்கும் தனக்கும் ஏற்படப்போகும் சந்திப்பை, சகிக்க வொண்ணாத ஆவலோடும் அபாரமாகப் பொங்கியெழுந்த மனவெழுச்சியோடும் எதிர்பார்த்து அந்த விடுதியில் இருந்த