பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 133

நற்புத்தி புகட்டி இருப்பாள் எப்படி இருந்தாலும், அவளை அயலாரிடம் காட்டியே கொடுத்திருக்க மாட்டாள். செளந்தர வல்லியோ அவ்வாறு யுக்தாயுக்தம் பிறரது மனம் புண்படுமே என்ற தாrண்யம் முதலியவைகளைக் கவனிக்காமல் உடனுக் குடன் பிறரது குற்றத்தைக் கண்டிப்பாள். அவளிடம் அத்தகைய மனப்பான்மை பூர்த்தியாக இருந்தது பற்றியே, அவள் கோகிலாம்பாளும் கண்ணபிரானும் பூஞ்சோலையில் இருந்ததைக் கண்டு முன்னர் விவரிக்கப்பட்டபடி அவர்களை அவமானப்படுத்தி விட்டாள். பிறகு கோகிலாம்பாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போனாள் என்பதைக் கண்டு சிறிதும் பொறாமல் அவளையும், தங்களது தாயையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக மகா கேவலமாக மானபங்கப்படுத்தித் தீர்த்துவிட்டாள். ஆகவே, இளையவளிடம் நல்ல குணமும் ஒழுங்கான நடத்தையும் இல்லையென்ற காரணத்தினால் அவளிடம் நாம் அதிருப்தி கொள்ள இயலாது. அவளிடம் நற்குண நல்லொழுக்கம் அமிதமாக இருந்தனவென்ற காரணத்தினாலும், குற்றவாளிகள் எப்பேர்ப்பட்ட மனிதராயிருந்தாலும் அவள் சிறிதும் தாrண்யம் பாராமல் அவர்களை அவமானப்படுத்துவாள் என்ற காரணத் தினாலுமே நாம் அவளிடம் அதிருப்தி கொள்ள வேண்டும். அவள் யெளவன காலத்தின் லக்ஷணப்படி கலியாணத்தின் மேலும், தனக்கு வரிக்கப்பட்டிருந்த புருஷர் மேலும் இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித வேட்கையும், கவர்ச்சியும் பிரமையும் கொண்டிருந்தாள். அந்த நிலைமையில் அவள் தனது அக்காளும் கண்ணபிரானும் பூஞ்சோலையில் ஒன்று சேர்ந்து ஒருவரோ டொருவர் கொஞ்சிக்கொண்டிருந்ததைக் காணவே, தனது அக்காள் கலியாணம் ஆவதற்கு முன் அத்தகைய காரியத்தைச் செய்கிறாளே என்ற ஆத்திரமும், அருவருப்பும் தோன்றி அவளை வதைத்தன. ஆனாலும், தானும் அவ்வாறு செய்து, அந்தச் சுகம் எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் எழுந்து அவளைத் துரண்டிக் கொண்டே இருந்தது. ஆயினும், அவள் அன்றிரவு தங்களது பங்களாவை விட்டு வெளிப்பட்டு கமுகுத் தோப்பிற்குள் இருந்த கொடிப்பந்தலண்டை வந்து அங்கு ஆயத்தமாய் நின்று தனது வருகையை ஆவலோடு எதிர்பார்த் திருந்த சுந்தரமூர்த்தி முதலியாரைக் காணவே, ஸ்திரிகளின்