பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - செளந்தர கோகிலம்

உத்தமலக்ஷணங்களான நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற உணர்ச்சிகள் சகிக்க இயலாமல் பெருகி அவளை வதைக்கத் தொடங்கின. தனது அக்காள் அவ்வாறு செய்ததைத் தான் நிரம்பவும் கடுமையாகக் கண்டித்துத் தான் அதுபோலவே செய்வது பெருத்த தவறு என்று அவளது மனச்சாட்சியே அவளை பலமாகக் கண்டிக்கத் தொடங்கியது. உடனே அந்த மங்கை தன்னைத் தானே கண்டித்துக் கொள்ளத் தொடங்கி, “சே! என் செய்கை தாயையடக்கி மகள் விபசாரம் செய்வதுபோல இருக்கிறதேயன்றி வேறல்ல. அக்காள் தவறு செய்தால் அதற்காக நானும் தவறு செய்கிறதா அவள் ஒரு வேளை இப்போது இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டால், என் நிலைமை என்னவாகிறது! அல்லது இவரே பின்னால் என்னைப்பற்றி என்ன நினைக்க மாட்டார். ஆகையால், நான் வரம்பை மீறி எந்தக் காரியமும் செய்வது தகாது. நான் துணிந்து இவ்வளவு தூரம் வந்து விட்ட தனால் காரியம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் இவருடன் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து, இவருடைய பிரியமும், மன உறுதியும் மாறாதிருக்கும்படிச் செய்துவிட்டுப் போய் விடுகிறேன்” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு நாணித் தலைகுனிந்து தயங்கித் தயங்கி அவரண்டை நெருங்கினாள்.

அவ்விடத்தில் ஆயத்தமாய் வந்து நின்று அவளது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த சுந்தரமூர்த்தி முதலியாரது அப்போதைய மனப்பான்மையும் செளந்தரவல்லியின் தீர்மானத்திற்கு ஒத்ததாகவே இருந்தது. தாம் முதலில் கோகிலாம் பாளை மணந்து, அவளது மனத்தை மயக்கி, தாம் சொல்வதுபோல அவள் கேட்கும்படிச் செய்து செளந்தரவல்லியையும் அவள் தனக்கே கலியாணம் செய்து கொடுக்கும்படிச்செய்து, இரண்டு பெண்களையும் மணப்பதன்றி, அவர்களிடமிருந்த ஏராளமான செல்வம் முழுதையும் அடியோடு தாமே அபகரித்துக் கொள்ள வேண்டுமென்பது சுந்தரமூர்த்தி முதலியாரது பிரதானமான கருத்து. கோகிலாம்பாளையே தமக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆதியில் புஷ்பாவதி அவர்களிடம் நிரம்பவும் சாமர்த்தியமாகக் கேட்டுத் தன்னாலேன்ற வரையில் முயற்சித்துப் பார்த்தாள். பிறகு கண்ணபிரானுக்கும் அவனது தாய்க்கும் அவமானம் ஏற்பட, அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போன பிறகாவது அவர்