பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 137

அதுவே, நீ மகா, ஒழுங்கான நடத்தையுடைய புனிதவதி என்பதைக் காட்டவில்லையா.

செளந்தரவல்லி : (அவர் கூறிய ஸ்தோத்திர மொழிகளைக் கேட்டு மிகுந்த மனவெழுச்சியும் பூரிப்பும் அடைந்து) என் அக்காளாய் இருந்தாலென்ன அம்மாளாய் இருந்தாலென்ன தகாத காரியத்தைச் செய்தால், அவர்களை நான் சும்மா விடமாட்டேன். அதுவுமன்றி, அவர்கள் செய்யும் காரியங்கள் என்னையும் அல்லவா பாதிக்கின்றன. என்னிடத்தில் பிரியம் வைத்திருக்கிற மனிதர்கள், நானும் அவர்களைப்போல துன்மார்க்கத்தில் போகக்கூடியவள் என்று நினைத்து என்னை வெறுப்பார்களல்லவா? ஆகையால், அவர்களைத் தண்டித்துத் திருத்துவதற்கு நானும் கடமைப்பட்டவளல்லவா. ஆனால் உலகத்தில், பெரியவர்கள் சிறியவர்களைத் திருத்தி அவர்கள் கெட்ட வழியில் போகாமல் அடக்குகிறது வழக்கம். எங்கள் குடும்பத்தில், அது தலைகீழாக இருக்கிறது.

சுந்தரமூர்த்தி முதலியார் : வாஸ்தவந்தான். ஆனாலும் இதில் இன்னொரு முக்கியமான விஷயமிருக்கிறது. உண்மையில் நீ எவ்விதத் தவறும் செய்யாத மகா சிரேஷ்டமான மனப்போக் குடையவள் என்கிறது என் மனசார சந்தேகமில்லாமல் தெரிகிறது. ஆகவே, நான் உன்மேல் ஏற்கெனவே வைத்த பிரியம் கொஞ்சமும் மாறாமல் இருப்பதோடு உன் நடத்தைகளைப் பார்க்கப் பார்க்க, அது அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறைச்சாலையிலுள்ள அந்தக் கண்ணபிரான் முதலியார் கடிதமெழுதினால், உன் அக்காள் புறப்பட்டுத் தனிமையில் போகலாமா? போனவள், பலகார மூட்டையோடு போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குள் போய் அவரோடு வெகுநேரம் இருந்து வருவதென்றால் அதை நாம் எப்படி வியாக்கியானம் செய்கிறது? இவைகளுக்கெல்லாம், உன் தாயார் இடங்கொடுக்க லாமா? இவைகள் ரகஸியமாய் நடந்து போயிருந்தாலும், பாதகமில்லை, எல்லா ஜனங்களும் சங்கதிகளைத் தெரிந்து கொண்டார்கள். எதுவும் ஒருவருக்குத் தெரிந்தால் ரகளியம், இருவருக்குத் தெரிந்தால் அம்பலம் என்று சொல்லுவார்கள். இத்தனை ஜனங்களுக்கும் தெரிந்து போன சங்கதியை இனி