பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 செளந்தர கோகிலம்

தவறான வழியில் சென்றதனால் அல்லவா. இத்தனையும் வந்து விளைந்திருக்கின்றன. நான் செய்த பெருந் தவறுக்கு இந்தத் தண்டனை நியாயமானதாகவே இருக்கிறது. ஜனங்களையாவது, கால வித்தியாசத்தையாவது நோவது மூடத்தனமேயன்றி வேறல்ல. நிச்சலனமாக இருக்கும் ஒரு குளத்தின் நடுவில் ஒரு சிறிய பருக்கைக் கல்லைப்போட்டாலும், அதனால் ஒன்றன் பின்னாகப் படிப்படியாய் அலைகள் எழுந்தெழுந்து வந்து கரையின்மேல் போய் மோதித் திரும்புவதுபோல, நாம் செய்யும் அற்பத் தவறு ஒன்றன் மேலொன்றாகத் தோன்றும் பல இடர்களையும், துன்பங்களையும், துயரத்தையும் தொடர்ச்சியாக நமது ஆயிசு காலம் முடிய உண்டாக்கி, நம்மை ஒழியா வேதனைக்கும் ஓயாத சஞ்சலத்திற்கும் ஆளாக்கும் என்பதும், ஒருவிதமான சிறிய காரணம், பலவிதமான வெவ்வேறு காரியங் களாக மாறிப் பாதிக்கின்றன வென்பதும் பிரத்தியrமான விஷயம். ஆதலால் இப்போது எனக்கு ஏற்படும் பெரிய அவதூறு என் ஆயிசு காலம் முடிய நீடித்து நிற்பதோடு அதற்குப் பிறகும் இந்த குடும்பத்தைப் பாதித்தே தீரும். இதைக் கருதித்தான், மானம் கெடவரின் வாழாமை முன்னினிதே என்று முன்னோர் இதற்கு ஒரு சிறந்த பரிகாரம் சொல்லியிருக்கின்றனர். என் பிராணபதியின் தாயார் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போனதைக் கண்டு நான் அந்த அம்மாளின் மேல் ஆயாசம் கொண்டேனே. அவர்கள் செய்யத் தீர்மானித்துக் கொண்ட காரியம் நியாயமானதென்றே இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் மானபங்கத்தைக் காட்டிலும், அவர்களுக்கு ஏற்பட்டது ஆயிரமடங்கு அதிகமானதென்றே சொல்லவேண்டும். தக்க பெரிய இடத்தில் தமது குமாரருக்குக் கலியாணம் செய்யத் தீர்மானித்து நிச்சயதார்த்தம் நடத்துகையில் ஆயிரக்கணக்கான கனதனவான்களின் முன்னிலையில் திருட்டுக் குற்றத்தின்மேல் அவரது புத்திரரைக் கைதி செய்தது அற்ப சொற்பமான விஷயமா? அதை யார் தான் சகித்துக்கொண்டு உயிரோடு இருப்பார்கள். போதாக் குறைக்கு அந்த அம்மாளே ஒரு குடிகாரத் துருக்கனுக்கு ஆசை நாயகியாயிருந்தாள் என்பதான அவதூறு ஏற்பட்டதே. அதைக் கேட்டவுடனேயே அவர்களுடைய பிராணன் போயிருக்க