பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 139

நம்முடைய கலியாணம் அநாதைக் கலியாணமாகத்தான் நடக்கும். என்னுடைய செல்வமென்ன செல்வாக்கென்ன என் சொந்த ஜனங்கள் எத்தனை பேர் வருவார்கள்! அதுவுமன்றி எங்களுக்குள் இன்னொரு யோசனையும் இருந்து வருகிறது. என் தங்கையின் கலியாணத்தைப்பற்றி பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சிக்கிரம் அநுகூலமாகவே முடியும்போல இருக்கிறது! அது தக்க பெரிய இடம். அவர்களெல்லோரும் நம்முடைய கலியாணத்திற்கு வருவார்கள். வந்து உன் அக்காளை அவர்கள் கண்டு விசாரணை செய்தால், அதிலிருந்து அவளைப் பற்றிய குப்பையெல்லாம் வெளிக் கிளம்பும். எங்கள் நிலைமை பரம விகாரமாய்ப் போய்விடும்.

செளந்தரவல்லி : (அளவற்ற மகிழ்ச்சியும் குதுரகலமும் அடைந்து):- ஆகா! அப்படியா புஷ்பாவதியம்மாளுக்கும் கலியாணத்துக்கு ஏற்பாடாயிருக்கிறதா நிரம்பவும் சந்தோஷ மாயிற்று. அது எந்த இடமோ? மாப்பிள்ளை ஏதாவது உத்தியோகத்தில் இருக்கிறார்களா?

சுந்தரமூர்த்தி முதலியார் : அவர்கள் இதே மைலாப்பூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மவுண்டு ரோட்டில் ஒரு பெரிய கம்பெனி இருக்கிறது. அந்தக் கம்பெனி சுமார் 10 லக்ஷம் ரூபாய் பெறும். அதைத் தவிர, அவர்களுக்கு இந்த ஊரில் பதினைந்து பங்களாக்கள் இருக்கின்றன. அவைகள் துரைமார்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. அவைகளிலிருந்து மாசம் ஒன்றுக்கு முப்பதினாயிரம் ரூபாய் வாடகை வரும். அவர்களுக்குச் சந்ததி ஒரே பிள்ளைதான் இருக்கிறார். அவர் சீமைக்குப்போய் ஐ.சி.எஸ். பரீட்சையில் தேறி வந்திருக்கிறார். அவருக்கு இந்த ஊரிலேயே மாதம் ரூ. 600 சம்பளத்தில் அஸிஸ்டெண்ட் கலெக்டர் உத்தியோகம் கிடைத்திருக்கிறது. அவருக்கு வயசோ சுமார் இருபத்து நான்குதான் இருக்கும். பார்ப்பதற்கு மன்மதனைப்போல இருப்பார். அவர் எப்போதும் தமாஷாகவும் சந்தோஷமாகவும் குது.ாகலமாகவும் இருப்பார். அவரைப் பார்த்தால் மகாராஜாவின் குழந்தை மாதிரியே இருக்கும். அவருக்குத்தான் புஷ்பாவதியைக் கொடுக்க முடிவாகி இருக்கிறது - என்றார்.