பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 45

சொந்த ஜனங்களையும் வரவழைத்து எங்களை அவமானப் படுத்தியவள் அவளேயென்பதும் இப்போது தெரிகிறது. இவ்வளவு அபாரமான சாமர்த்தியம் அவளுக்கு இருக்கையில், இனி அவள் தன் காரியங்களையும் குடும்ப காரியங்களையும் தானே கவனித்து நிர்வகிப்பாள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. ஆகையால், எல்லாவற்றையும் அவளே எடுத்துக் கொண்டு rேமமாயிருக்கட்டும். நான் இனி உயிர் வாழ்வதை விட இறப்பதே சர்வ சிலாக்கியமான விஷயம். ஆகையால், என் தீர்மானத்தை நான் மாற்றாமல் எப்படியும் நிறைவேற்றியே திரவேண்டும். ஆனால் நான் இப்போது கிணற்றில் விழுவதில் ஒர் இடைஞ்சல் இருக்கிறது. இன்னம் ஒரு வாரத்திற்குள் ஒரு முகூர்த்த நாள் இருக்கிறதாம். அதில் இவர்கள் தங்களுடைய கலியாணத்தை முடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலோடு இருக்கிறார்கள். நாளைய தினம் என்னுடைய பிணம் கிணற்றி லிருந்து அகப்பட்டால், அது கலியாணத்துக்கு ஒர் அபசகுனமாக இருக்கும்! சாவு தீட்டில் கலியாணம் செய்வதும் உசிதமாக இராது. சாவு விழுந்த வீட்டில் கலியாணம் செய்கிறார்களே என்று ஜனங்கள் ஏசுவார்கள். இதையெல்லாம் கருதி, இவர்கள் கலியாணத்தை நிறுத்தும்படி நேரிடும். செளந்தரவல்லிக்கு என் மேலுள்ள ஆத்திரம் இன்னும் அதிகரிக்கும். நான் இறந்துபோன பிறகும் அவள் என்னைச் சபித்துக் கொண்டே இருப்பாள். ஆகையால், நான் இப்போது கிணற்றில் விழுந்து இறப்பதை நிறுத்தி, அவளுடைய கலியாணத்திற்கு மூன்று நான்கு நாள்கள் கழிந்த பிறகு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறேன். அதுவரையில் நான் என் அம்மாளிடம் சாதாரணமாகவே இருக்கிறேன். நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணியிருப்பதைப் பற்றியாவது, இன்று கிணற்றில் விழுந்தது முதலிய விவரங்களைப் பற்றியாவது, அம்மாள் சிறிதும் சந்தேகியாதபடி நான் நடந்து கொள்ளுகிறேன். அதுவுமன்றி, நான் திரும்பிப்போய் அம்மாளுக்கு எழுதி வைத்திருக்கும் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு வேறொரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, விடியற் காலையில் எழுந்து ஒரு வண்டியில் உட்கார்ந்து கொண்டு வண்ணாரப் பேட்டைக்குப் போய் விடுகிறேன். இவர்கள் சுயேச்சையாய்க் கலியாணத்தை நடத்திக் செ.கோ.IV-40