பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 147

கெடுதல்களையும் சீர்தூக்கி, தான் செளந்தரவல்லியென்று நடித்துவிட்டுப் போய்விடுவதே நலமெனத் தீர்மானித்துக் கொண்டாள். அதற்குள் புஷ்பாவதி கோகிலாம்பாளண்டை நெருங்கி வந்துவிட்டதன்றி, தணிவான குரலில், “என்ன செளந்தரா வந்த காரியம் முடிந்ததா? அவர் வந்தாரா? அல்லது அவருக்காகக் காத்திருக்கிறாயா?” என்று கூறிய வண்ணம், கோகிலாம்பாளது தோளின்மேல் தனது இடக்கரத்தை எடுத்து வாஞ்சையோடு போட்டுக் கொண்டாள்.

பகற் காலத்திலேயே எவரும், அந்தச் சகோதரிகள் இருவரு டைய வேறுபாட்டையும் கண்டுபிடிப்பது துர்லபமாயிருக்கும் என்பது முன்னரே கூறப்பட்ட விஷயமாதலால், இரவில் அது முற்றிலும் சாத்தியமில்லாத காரியமாயிருந்தது. ஆகவே, புஷ்பாவதி அவளது பக்கத்தில் வந்து அவளைப் பார்த்தும், அவள் கோகிலாம்பாள் என்று சந்தேகிக்க இயலாமல் போய்விட்டது. அதுவுமன்றி, அவள் தங்கை அவ்விடத்தில் இருப்பாளென்று எதிர்பார்த்தாளேயன்றி, அக்காளும் வந்திருப்பாளென்று சிறிதும் சந்தேகிக்கவில்லை. ஆதலால் புஷ்பாவதியும் அவளை செளந்தர வல்லியென்றே நினைத்து அவளிடம் நிரம்பவும் தாராளமாகவும், அன்னியோன்னிய பாவமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தாள். புஷ்பாவதி தன்னிடம் அதற்கு முன் அவ்வாறு நடந்து கொண்ட தில்லையானாலும், சந்தர்ப்பத்தைக் கருதிக் கோகிலாம்பாள் தனது கிலேசத்தை வெளியிடாமல் ஜாக்கிரதையாகவே இருந்த தன்றி, சற்று நேரத்திற்குமுன் நேர்ந்த சந்திப்பு, சம்பாஷணை, தீர்மானம் முதலிய வரலாறு முழுதையும் அப்படியே எடுத்துக் கூறிவிட்டு, புஷ்பாவதிக்குத் தக்க பெரிய இடத்தில் கலியான மாகப் போவதைப் பற்றித் தான் பரம சந்தோஷமடைவதாகவும் கூறி, அவளை அழைத்துக்கொண்டு பங்களாக் கட்டிடம் வரையில் வந்தாள். புஷ்பாவதி, ‘அம்மா செளந்தரா! நான் உன்னை உன்னுடைய படுக்கையறையில் கொண்டுவந்து விட்டுப் பிறகு என் படுக்கைக்குப் போகிறேன்’ என்றாள்.

அப்பொழுது செளந்தரவல்லி அநேகமாய்த் தனது படுக்கை யறையை அடைந்து சயனித்துக் கொண்டிருக்கலாமென்று கோகிலாம்பாள் நினைத்து, “அம்மா புஷ்பாவதி நாம் இருவரும் இந்த அகால வேளையில் எங்கேயோ போய்விட்டு வருகிறோ