பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 13

வேண்டும்; தப்பி நின்றது அரிய சம்பவமென்றே எண்ண வேண்டும். தமது குமாரரின் மேல் அவருக்கு இருக்கும் அபாரமான வாஞ்சையினாலும், தாம் சிறிதும் தவறு செய்ய வில்லையென்ற மனோதிடத்தினாலுமே, அவர்களுடைய உயிர் போவது தடைப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தது நியாயமான காரிய, மாகவே தோன்றுகிறது. இப்போது இன்ஸ்பெக்டர் சம்பந்தமாக, எனக்கு ஏற்பட்டிருப்பது அப்படி அபாண்டமான அவதுாறே, அதுபோலவே, அவர்களின்மீது ஏற்பட்டதும் அபாண்டமாகத்தரன் இருக்கும். ஆயினும், முறிந்துபோன பால் மறுபடி ஒரு பொழுதும் பழைய நிலைமைக்கு வராததுபோல ஜனங்களின் மனத்தில் ஏற்பட்ட சம்சயம் சுத்தமாக மாறப் போகிறதுமில்லை. நிஷ்களங்கமான பழைய மதிப்பும் பெருமையும் தூய்மையும் உண்டாகப் போகிறதில்லையென்பதைக் கருதியே அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் அபாரமான உலக அநுபவமும், விவேக முதிர்ச்சியும் உடையவர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கியே அவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டுமென்பது நிச்சயம். ஆகவே நானும், எனக்கு ஏற்பட்டிருக்கும் மானபங்கத்தைப் போக்கிக் கொள்வதற்கும், இது என் குடும்பத்தாரைப் பாதிக்காமல் என்னோடு மட்டும் ஒழிந்து போவதற்கும் சாதனமாக நான் என் உயிரை விட்டு விடுவதே உசிதமான காரியம். நான் தவறான காரியம் எதையும் செய்யவில்லையென்று ஆள்மூலமாய்ச் செய்தி சொல்லியனுப்பியும், வேறு வகையில் ருஜூப்படுத்தியும், ஜனங் களுடைய கெட்ட அபிப்ராயத்தை மாற்ற முயல்வதைவிட நான் உயிரைவிட்டு அதன்மூலமாய் நான் நிரபராதி என்று உலகத் தாருக்கு மெய்ப்பிப்பதே சுலபமானதும், உடனே கைமேல் பலனளிக்கத் தக்கதுமான காரியம்; அதைத்தான் நான் இப்போது செய்ய வேண்டும். நம்முடைய பூஞ்சோலைக்குள் ஏராளமான பெரிய கிணறுகள் இருக்கின்றன. எதிலாகிலும் ஒன்றிற்குள் விழுந்து நான் உயிரை விட்டு விடுகிறேன். ஊழ் வினையினால் உண்டாகும் துன்பங்களையும், துயரத்தையும் மானக் கேட்டை யும், நம்முடைய புத்திசாலித்தனத்தினாலும், முயற்சியினாலும் வெல்ல வேண்டுமென்பது உலக நீதியானாலும், என் விஷயத்