பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 செளந்தர கோகிலம்

மென்பதை யாராவது தெரிந்து கொள்ளுவார்கள். ஆகையால், இனி நாம் பிரிந்து தனித்தனியாய்ப் போவதே நல்லது’ என்று கூற, புஷ்பாவதியும் அதை ஆமோதித்தாள். அதுபோலவே அவர்களிருவரும் தனித்தனியாய்ப் பிரிந்து பங்களாவிற்குள் போய்ச் சேர்ந்து தன் தன் படுக்கையை அடைந்தனர். கோகிலாம் பாளுக்கு முக்கியமான ஒரு விஷயம் மாத்திரம் நிரம்பவும் திருப்தி கரமாக இருந்தது. இரவில் தனிமையில் தனது தங்கை சுந்தர மூர்த்தி முதலியாரைச் சந்தித்த சமயத்தில் அவள் வரம்பு மீறித் தனது பிரியத்தைக் காட்டாமல் மரியாதையாகவே தூரத்தில் நின்று வியவகாரத்தை மாத்திரம் கவனித்துக் கொண்டு வந்ததைக் காண, கோகிலாம்பாள் தன்னைக் காட்டிலும், தனது தங்கை அந்த விஷயத்தில் மெச்சுதற்குரியவள் என்று நினைத்தாள். அவ்வாறு நினைத்த வண்ணம், அவள் அதற்கு முன் தனது தாய்க்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கிழித்தெறிந்து விட்டு வேறு காகிதத்தில் அடியில் வருமாறு எழுதலானாள்:

தேவரீர் அம்மாள் அவர்களுடைய பொற்பாத கமலங்களில் புதல்வி கோகிலாம்பாள் அனந்தகோடி சாஷ்டாங்க தெண்ட னிட்டு எழுதுவது. கால வித்தியாசத்தினாலும், புத்திக் குறை வினாலும் செய்யப்பட்ட ஒர் அற்ப குற்றம் மலைபோல வளர்ந்து பெருத்த மானபங்கத்தையும், துரஷணையையும் உண்டாக்கிவிட்டது. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையைச் சீர்படுத்த வேண்டுமென்று நினைத்து, நாம் ஏதாவது பரிகாரத்தைத் தேடினால், அதுவும் ஒன்று கிடக்க ஒன்றாய் முடிந்து, உள்ளதைக் காட்டிலும் அதிகமான துன்பத்தையே உண்டாக்கினாலும் உண்டாக்கலாமென்று நான் நிரம்பவும் அஞ்சுகிறேன். ஆகவே, என்னைப் பற்றிய யோசனையை நாம் இப்போது கொள்வதை விட்டு, நம்முடைய செளந்தராவின் எதிர்கால rேமத்தையும் வாழ்க்கையையும் இப்போது முக்கியமாயும் அவசரமாயும் கவனிப்பது அத்யாவசியமான காரியமென்று நினைக்கிறேன். என் சம்பந்தமாக ஏற்பட்ட தலைகுனிவு நீங்க, இன்னம் வெகுகாலம் பிடிக்குமென்பது என் அபிப்பிராயம். செளந்தராவுக்கு இப்போது கிடைத்துள்ள வரனைவிட்டு, நாம் வேறொருவரைத் தேடினாலும், இந்த நிலைமையில் அது எளிதில் கைகூடுமென்று நான் நினைக்கவில்லை. ஆகவே, ஏற்கெனவே கிடைத்துள்ள இடம்