பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 149

தவறிப் போகாமல், நாம் அந்தக் காரியத்தை அதிசீக்கிரத்தில் முடித்துவிடுவதே உசிதமென நினைக்கிறேன். செளந்தராவுக்கும் அந்த இடமே பிடித்திருப்பதோடு, அதைவிட்டு இனி வேறு எந்த இடத்தையும் அவள் விரும்பமாட்டாள் என்பதும் நிச்சயமாகத் தெரிகிறது. அவர்களும் செளந்தராவின் கலியாணத்தை முன்னால் முடித்துக் கொள்ள ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதும் பரிஷ்காரமாகத் தெரிகிறது. அதுவுமன்றி, புஷ்பாவதி யம்மாளுக்கும் கலியாணத்திற்கு ஏற்பாடு ஆகியிருப்பதாகத் தெரிகிறது. இன்னம் ஒரு வாரத்திற்குள் ஒரு முகூர்த்த நாள் இருக்கிறதாம். அதில் இரண்டு கலியாணங்களையும் சேர்த்து நடத்திவிட வேண்டுமென்பது அவர்களுடைய கருத்தென்பதும் தெரிகிறது. இது விஷயமாய் நாளைய தினம் காலையில் புஷ்பாவதியம்மாள் உங்களிடம் பிரஸ்தாபிப்பார்களென்று நான் நம்புகிறேன், தாங்கள் எவ்வித ஆட்சேபணையும் சொல்லாமல் முழு மனசோடு அதை ஏற்றுக்கொண்டு, கலியாணத்திற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் ஆயத்தம் செய்யுங்கள். இந்தச் சமயத்தில் நான் நம்முடைய பங்களாவில் இருப்பது உசிதமல்லவென்று நான் நினைக்கிறேன். ஆகவே, விடியற் காலையில் நான் புறப்பட்டு நம்முடைய வண்ணாரப்பேட்டை பங்களாவுக்குப் போய் அங்கே இருந்து வருகிறேன். கலியாணத்துக்கு நான் இல்லையே என்று நினைக்காமல், காரியத்தை முடியுங்கள். செளந்தராவின் rேமமே பிரதான மன்றி, நான் கலியாணத்திற்கு வராமல் இருப்பது, ஒரு பொருட்டல்ல. அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை. நன்மை அதிகமாய் ஏற்படும். நான் எல்லாவற்றையும் தீர யோசித்துப் பார்த்தே இந்தக் காரியத்தைச் செய்கிறேன். என்னைப் பற்றித் தாங்கள் வருந்தாமல் பிரதானமான காரியத்தை நிறைவேற்றி வையுங்கள். நம்முடைய செளந்தரா மகா சூrமமான புத்தியும் விவேகமும் உடையவள்; நம்முடைய குடும்ப விவகாரங்களை நடத்தும் திறமையும் அவளிடம் பூர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆகவே, இதுவரையில் நாம் ஏற்றுவந்த பொறுப்பையெல்லாம் அவளிடமே விட்டுவிடுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். சிறைச்சாலையில் இருப்பவர் விஷயமாய்த் தாங்கள் இனி எவ்வித முயற்சியும்