பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 செளந்தர கோகிலம்

எடுத்துக் கொள்ள வேண்டாம்; இனி நீங்கள் செளந்தராவின் கலியான சம்பந்தமான ஏற்பாடுகளிலேயே தாங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமன்றி, மேலே குறித்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமும் கவனம் செலுத்த வேண்டியதே இல்லை. நாளை தினம் காலையில், நம்முடைய வக்கீல் ஐயா வருவார்கள். அவர்களைத் தாங்கள் வண்ணாரப்பேட்டை பங்களாவுக்கு அனுப்பி வையுங்கள். என்னிடம் இப்போது கையில் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதை நான் என் தற்காலச் செலவுக்கு உபயோகித்துக் கொள்ளுகிறேன். நான் நேரில் தங்களிடம் பேசித் தங்களுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு போக வேண்டியதே ஒழுங்கான காரியமானாலும், பொழுது விடிந்த பிறகு இங்கே இருந்து நம்முடைய வேலைக்காரர் களுடைய முகத்தில் விழிக்க எனக்கு இஷ்டமில்லை. ஆகையால், நான் இம்மாதிரி விடியற்காலையிலேயே போகிறேன். இந்தப் பிழையைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும்.

மற்றவை பின்னால்,

இங்ஙனம் தங்களிடம் அத்யந்த பயபக்தியையுடைய தங்கள் குமாரி, கோகிலா

- என்று எழுதப்பட்ட கடிதத்தை அவள் படித்து உரைக்குள் போட்டு ஒட்டி, மேல் விலாசமெழுதி, அதை எடுத்துக்கொண்டு சந்தடி செய்யாமல் தனது தாயின் சயன அறைக்குப் போய், அந்த அம்மாள் காலையில் எழுந்தவுடன் பார்க்கத்தக்க இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பி வந்து தனக்குத் தேவையான ஆடையா பரணங்களையும், மற்ற சில்லரை சாமான்களையும் எடுத்து மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு, அவளிடம் நிரம்பவும் பிரியம் உடையவளான ஒரு தாதியை எழுப்பி, விடியற்காலம் ஐந்து மணிக்கு முன்பே, வண்டி தயாரிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாட்டைச் செய்துவிட்டு தனது சயனத்தில் படுத்துக் கொண்டே இருக்க, அந்த இரவு வெகு சீக்கிரத்தில் கழிந்து போனதாகத் தெரிந்தது. விடியற்கால வேளை வந்தது. வேலைக் காரி வந்து வண்டி ஆயத்தமாயிருப்பதாய்க் கூற, கோகிலாம்பாள் தனது மூட்டையை அந்த வேலைக்காரி எடுத்துக் கொண்டு வரச்