பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 செளந்தர கோகிலம்

வேண்டும் அல்லது மறுபடி தனது தாயினிடமாவது போயிருக்க வேண்டுமென்று அவள் எண்ணிக் கொண்டாள். இரண்டிடங் களில் எதற்குப் போயிருந்தாலும், புஷ்பாவதி சயனித்துக் கொள்வதற்குள் எப்படியும் தனது சயன அறைக்கு வந்தே பிறகு தூங்கப்போவாளென்று செளந்தரவல்லி நினைத்து, அவ்விடத்தை விட்டுப் போய்த் தனது தாய் வழக்கமாகக் கொத்துச் சாவியை வைக்கும் இடத்தையடைந்து, ஒசை செய்யாமல் அதை எடுத்துக்கொண்டு நேராகத் தனது சயன அறைக்குச் சென்று அதைத் தனது மேஜைக்குள் வைத்துப் பூட்டித் திறவுகோலைத் தனது கழுத்துச் சரட்டில் பத்திரமாக முடிந்துகொண்டு பஞ்சணை யில் படுத்தாள். படுத்தவள் அபாரமாகப் பொங்கியெழுந்த பல வகைப்பட்ட உணர்ச்சிகளால் உலப்பப்பட்டவளாய் வெகு நேரம் வரையில் விழித்துக்கொண்டே படுத்திருந்து முடிவில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். ஆழ்ந்தவள் பொழுது விடிந்த வுடன் விழித்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவுடன் அவளுக்குப் புஷ்பாவதியைப் பற்றிய நினைவே முதலில் உண்டாயிற்று. அவள் முதல் நாளிரவில் தன்னிடம் வராமலே இருந்துவிட்டது செளந்தரவல்லிக்கு நிரம்பவும் ஆச்சரியகரமாகவும் சந்தேகாஸ்பத மாகவும் இருந்தது. ஆகையால், அதன் காரணமென்னவென்பதைத் தெரிந்து கொள்ளவும், முதல் நாளைய சந்திப்பின் விவரங்களை அவளிடம் சொல்லவும் ஆவல் கொண்டவளாய் அவள் உடனே தனது சயனத்தை விட்டெழுந்து நேராகப் புஷ்பாவதி சயனித்திருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். புஷ்பாவதி அதற்கு முன்னரே தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு தனது தமயனாரது வருகையை ஆவலோடு எதிர் பார்த்தவளாய் உட்கார்ந்திருந்தாள். அவள் தனது கலியாணத்தைப் பற்றியும் தனக்கு ஏற்படப்போகும் மணமகனது ஒப்பற்ற சிறப்புகளைப் பற்றியும் இன்பகரமாக எண்ணமிட்டுக் கொண் டிருக்க, அப்பொழுது அவ்விடத்தை அடைந்த செளந்தரவல்லி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஆசையோடு புஷ்பாவதியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு,"புஷ்பாவதி என்ன இவ்வளவு பராமுகம்? புது சம்பந்தம் ஏற்பட ஏற்பட, பழையதெல்லாம் புளித்துப் போனதா என்ன?’ என்று வேடிக்கையாக வினவினாள். அதைக் கேட்ட புஷ்பாவதி திடுக்கிட்டு நிரம்பவும் நயமாகவும் வாஞ்சையாகவும்