பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 153

பேசத் தொடங்கி, “ஏன் செளந்தரா அப்படிச் சொல்லுகிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? ஒன்றுமில்லையே?’ என்றாள்.

செளந்தரவல்லி புன்னகை செய்த வண்ணம், தவறு ஒன்றும் செய்யவில்லை. நான் உன் படுக்கையின் மேல் வைத்திருந்த கடிதத்தை நீ பார்த்திருப்பாயே. அதற்குமேல் என்ன நடந்த தென்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா? நான் பூஞ்சோலையில் உன் தமயனாருடன் பேசி அவரை அனுப்பி விட்டுத் திரும்பியபின் நேராக இங்கே வந்து பார்த்தேன். நீ இங்கே இல்லை. நீ எப்படியும் என்னிடம் வந்துவிட்டே படுத்துத் தூங்குவாயென்று நினைத்து நான் நேற்றிரவு எவ்வளவு நேரம் விழித்துக் கொண்டிருந்தேன் தெரியுமா” என்றாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதி திடுக்கிட்டு பிரமித்துப் போய், “என்ன என்ன! நான் உன்னைப் பார்க்கவில்லையா! நீ சொல்வது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே! வேண்டுமென்றே தமாஷ் பண்ணுகிறாயாயென்ன!” என்றாள்.

செளந்தரவல்லியும் பிரமிப்பும் குழப்பமும் அடைந்து, “என்ன புஷ்பாவதி அப்படிச் சொல்லுகிறாய்? நான் நிஜத்தைத் தானே சொல்லுகிறேன்” என்றாள். .

புஷ்பாவதி முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பும் கலக்கமும் அடைந்து, ‘என்ன செளந்தரா! நீ நிஜத்தைச் சொல்லுகிறேன் என்கிறாய்! நேற்று ராத்திரி நான் உன்னைப் பார்க்கவில்லை என்கிறாயே!” என்றாள்.

செளந்தரவல்லி : ஆம், பார்க்கத்தான் இல்லை. நீ என்னைப் பார்த்ததாகவா சொல்லுகிறாய்! இதென்ன பெரிய அதிசயமாயிருக்கிறதே! எப்போது எந்த இடத்தில் நீ என்னைப் பார்த்தாய்?

புஷ்பாவதி : (அத்யந்த ஆச்சரியத்தோடு) என்ன செளந்தரா! உன் அம்மாளை நான் அவர்களுடைய படுக்கைக்கு அனுப்பி விட்டு, இங்கே வந்தேன் வந்து, நீ வைத்திருந்த கடிதத்தைப் பார்த்தேன். உடனே நானும் புறப்பட்டு, அந்தக் கிணறு இருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புதுமோகத்தில் பார்க்கிறபடியால், நான்