பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 செளந்தர கோகிலம்

உடனே வந்து உங்களுடைய சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடா தென்றும், கடைசியில் வந்து சேர்ந்துகெள்ளலாமென்றும் நினைத்துத் தயங்கித் தயங்கி மெதுவாக வந்தேன். எனக்கு வழியும் தெரியவில்லை. எதிரில் நீ மாத்திரம் வந்தாய். என் தமயனார் உன்னுடன் பேசிவிட்டுப்போய் விட்டதாக நீ சொன்னாய். நாமிருவரும் திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்தோமே! அப்படி இருக்க, நீ ஒன்றையும் அறியாதவள்போல, என்னிடம் தமாஷ் பண்ணுகிறாயே!

செளந்தரவல்லி : (முற்றிலும் பிரமித்து ஸ்தம்பித்துப் போய்) என்ன புஷ்பாவதி! நீ சொல்வது பிரமாணமான சங்கதிதானா அல்லது நீ தான் என்னிடம் தமாஷ் செய்கிறாயா? புஷ்பாவதி : நான் சொல்வது பிரமாணமான சங்கதி. நான் உன்னிடத்தில் விளையாடுவேனா!

செளந்தரவல்லி : அப்படியானால், நீ வேறே யாரையோ கண்டு, நானென்று தப்பாக எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். நான் உன் தமையனாரை அனுப்பிவிட்டு நேராய் என் அறைக்குப் போய்விட்டேன். யாரையும் நான் சந்திக்கவில்லையே!

புஷ்பாவதி : என்ன ஆச்சரியம் இது வேறே மனிதராய் இருந்தால் ரூபம், உயரம், பருமன், குரல் எல்லாம் எப்படி ஒத்துக் கொள்ளும்.

செளந்தரவல்லி : அப்படியானால், அது என் அக்காளாகத் தான் இருக்க வேண்டும். அவள் எதையாவது உத்தேசித்துக் கொண்டு பூஞ்சோலைக்கு வந்திருப்பாள். அவளை நீ கண்டு நானென்று ஆள்மாறாட்டமாக எண்ணிக் கொண்டிருப்பாய்.

புஷ்பாவதி : நான் ‘'செளந்தரா’ என்று கூப்பிட்டேன். அவள் உன்னைப் போலவே நடந்துகொண்டு, உனக்கும், என் தமையனாருக்கும் நடந்த சங்கதிகளையெல்லாம் சொன்னாளே!

செளந்தரவல்லி : ஆ! அப்படியா! அவள் சொன்ன சங்கதிகளையெல்லாம் சொல் பார்க்கலாம் - என்றாள். உடனே புஷ்பாவதி கோகிலாம்பாளால் கூறப்பட்ட விவரங்கள் முழுதை யும் அப்படியே தெரிவித்தாள். அதைக்கேட்ட செளந்தரவல்லி சகிக்க வொண்ணாத வியப்பும் ஆத்திரமும் அடைந்து, “என்ன