பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 155

வேடிக்கை இது! நாங்கள் பேசியதையெல்லாம் அவள் அப்படியே சொல்லி இருக்கிறாளே! அவள் வந்து பக்கத்தில் ஒளிந்து கொண் டிருந்து எங்கள் சம்பாஷணையை முதலிலிருந்து கடைசி வரையில் கேட்டிருக்கிறாள் போலிருக்கிறதே! அங்கே வேறே யாருமில்லை யென்றும், இது இந்த உலகத்தில் யாருக்கும் தெரிந்திருக்கா தென்றுமல்லவா நான் நினைத்திருந்தேன். அவள் பெருத்த திருட்டுத்தனமல்லவா செய்திருக்கிறாள். யோசித்துப் பார்க்கும் பட்சத்தில், உன் தமையனாருடைய கடிதத்தை அவள் எப்படியோ பார்த்துவிட்டு, நாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டுமென்று வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாள் போலிருக்கிறதே. அப்படி யானால் அவள் உன்னுடைய படுக்கைக்கு ஏதோ கருத்தோடு வந்திருக்கிறாள். அங்கே கடிதம் இருந்ததைப் பார்த்திருக்கிறாள்; உடனே பூஞ்சோலைக்கு வந்து ஒளிந்து கொண்டிருந்து சங்கதியைத் தெரிந்து கொண்டிருக்கிறாள். அவள் வந்த வழியில் நீ போனாய் போலிருக்கிறது. அவளைக் கண்டு, நீ உடனே நானென்று நினைத்து என் பெயரைச் சொல்வி அழைத்திருக் கிறாய். நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாய் இருக்கிறதை வைத்துக் கொண்டு அவள் உன்னிடம் சாமர்த்தியமாக நடந்து உன்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள்.

புஷ்பாவதி : அப்போது ஏமாற்றினதால் என்ன வந்து விட்டது. எப்படியும் நாம் ஒருவரையொருவர் பார்க்க மாட்டோமா இதைப்பற்றிப் பேச மாட்டோமா! அப்போது உண்மை தெரியாமல் போய் விடுமா! இதெல்லாம் என்ன தந்திரத்தில் சேர்ந்தது!

செளந்தரவல்லி : இது நல்ல தந்திரந்தான். இல்லா விட்டால், அவள் எதற்காக அங்கே வந்தாள் என்பதைச் சொல்ல வேண்டியிருக்குமல்லவா. நீயும் அங்கே போன காரணத்தையும், ‘செளந்தரா'வென்று என்னைக் கூப்பிட்ட காரணத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். தான் இன்னாள் என்று அவள் சொல்லிக் கொள்ளாதது உங்கள் இருவருக்குமே நல்லதாக முடிந்தது. பார்த்தாயா, அவர்களுடைய திருட்டுத்தனத்தை தாயும் மகளும் நேற்றுக் காலையில் திருட்டுத்தனமாய் நடந்ததற்குப் பட்ட பங்கம் போதாதா மறுபடி அவளுடைய கோணல் புத்தி போகவில்லையே!