பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 157

உனக்குக் கொஞ்சமும் பிரயாசையில்லாதபடி எல்லாக் காரியமும் உன்னிஷ்டப்படியே முடிந்துவிட்டது! கோகிலாம்பாள் நேற்று இரவில் பூஞ்சோலைக்கு வந்து நீங்கள் பேசியதைக் கேட்டது சகல விதத்திலும் நல்லதாகவே முடிந்தது” என்றாள்.

அதைக் கேட்ட செளந்தரவல்லி திடுக்கிட்டு மிகுந்த ஆவ லுடன், ‘ஆ அப்படியா என்ன விசேஷம் புஷ்பாவதி?” என்றாள். உடனே புஷ்பாவதி, கோகிலா விடியற்காலமேயே புறப் பட்டு வண்ணாரப்பேட்டை பங்களாவுக்குப் போய் விட்டாளம். அவள் இனி இந்தப் பங்களாவுக்கே வரப்போகிறதில்லையாம்; உன்னுடைய கலியாணத்தை நம்முடைய இஷ்டப்படி உடனே முடித்துவிடும்படியும், உங்கள் வீட்டுச் சகலமான சொத்துக்களை யும் நிர்வாகத்தையும் உன் வசம் ஒப்புவித்து விடும்படியும் அம்மாளுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவள் அம்மா ளுக்குக் கூட தெரியாதபடி விடியற்காலையிலேயே புறப்பட்டுப் போய் விட்டாளாம்’ என்றாள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி மனம்கொள்ளாக் களிப்பும், பூரிப்பும் அடைந்து, ‘ஆ அப்படியா இதெல்லாம் நிஜந்தானா அல்லது வேடிக்கைக்காக நீயே இப்படிச் சொல்லுகிறாயா? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது? அம்மாள் இப்படிப்பட்ட குடும்ப விஷயங்களையெல்லாம் இலேசில் வெளியிடக் கூடியவர்களல்லவே! என்றாள்.

புஷ்பாவதி, ‘நான் போனபோதே அம்மாள் இன்று என்னோடு சரியாயப் பேசமாட்டார்களென்று நினைத்துக் கொண்டே போனேன். அதற்கு மாறாகவே எல்லாம் இருந்தது. முதலில் அம்மாளுடைய முகம் ஏதோ விசனத்யுைம் வியாகுலத்தை யும் காட்டியதாக இருந்தது. ஆனால் அம்மாள் என்னைக் கண்ட வுடனே, திடீரென்று மாறுபட்டு இதற்குமுன் என்னிடம் எவ்வளவு வாஞ்சையாகவும் மதிப்பாகவும் நடந்து கொள்ளுவார் களோ அதைவிடப் பன்மடங்கு அதிக பிரியமாகவும் மரியாதை யாகவும் நடந்து என்னை வரவேற்றதன்றி, கோகிலாம்பாள் எழுதி வைத்துப் போயிருக்கும் கடிதத்தையே அவர்கள் என்னிடம் காட்டினார்கள். காட்டியதன்றி, அதில் எழுதப்பட்டு இருப்பது போலவே தாம் நடக்க ஸித்தமாய் இருப்பதாகச்