உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 3.65

ஏராளமாக வராவிட்டால், அது பார்வைக்கு விகாரமாக இருக்கும், மைலாப்பூரார் வீட்டில் அது நடந்தால், நாம் விருந்தாளிகள் போல இருந்து வந்துவிடலாம்; நம்மோடு கூட அதிக ஜனங்கள் வரவேண்டுமென்பதில்லை.

புஷ்பாவதி : சரி; அதுவும் நல்ல யோசனைதான்; நான் இவ்விடத்திலேயே இருக்கிறேன். நான் இங்கே இருந்தால்தான் செளந்தரவல்லியின் மனநிலைமை மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும், கலியாணச் செலவுக்கும் வேண்டிய பணங்களை எல்லாம் நான் கேட்டுக் கேட்டு அவளிடத்திலிருந்து வாங்கலாம். இப்போது கலியாணச் செலவுக்காக எவ்வளவு ரூபாய் தேவையாகும் என்று சொன்னால், அதை அவளிடம் சொல்வி இன்றைக்குள் எடுத்துக் கொடுக்கச் செய்து வாங்கி வைக்கிறேன். நீங்கள் மறுபடி இன்று அந்தியில் வந்து அதை வாங்கிக்கொண்டு போகலாம்; இன்னம் அடிக்கடி என் மூலமாகக் கேட்டுப் பணம் வாங்கிக் கொண்டும் போகலாம்.

சுந்தரமூர்த்தி முதலியார் : ஆம். ஆம். அதையெல்லாம் உத்தேசித்துத்தான், நான் உன்னை இங்கே இருக்கச் சொன்னது. எல்லாவற்றிற்கும் நீ பூஞ்சோலையம்மாளைவிட்டு ஒரு லக்னப் பத்திரிகை தயாரிக்கச் செய்து அதையும் கையில் வாங்கி வைத்துக்கொள். நமக்கு ஆதாரம் வேண்டுமல்லவா.

புஷ்பாவதி : ஆகட்டும்; அப்படியே செய்கிறேன்.

சுந்தரமூர்த்தி முதலியார் : இன்னொரு முக்கியமான சங்கதியை உன்னிடம் சொல்ல வேண்டுமென்று வந்தேன். அதை மறந்துவிட்டேன். இவர்களுக்கு ஏதாவது சமாசாரப் பத்திரிகை வருவதுண்டா? அதை யாராவது படிக்கிறதுண்டா?

புஷ்பாவதி : (வியப்பும் ஆவலும் அடைந்து) இவர்களுக் குத் தமிழில் சுதேசமித்திரன் தினசரி பதிப்பு வருகிறது. இதற்கு முன் அதைக் கோகிலாம்பாள் படிக்கிறது. மற்ற இருவரும் கேட்கிறது. இப்போது வரும் பத்திரிகைகள் பிரித்துப் பார்ப்பதற்கு மனிதர் இல்லாமையால் வந்தபடி கிடக்கின்றன.

சுந்தரமூர்த்தி முதலியார் : நேற்று மர்லையில் வந்த பத்திரிகையை இவர்கள் யாரும் படிக்கவில்லையே?