பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 167

விட்டாள். முன் எஞ்சினில் இருந்தவரான வண்டி ஒட்டுகிறவர் அதைக் கண்டு திடுக்கிட்டுப் போய் உடனே வண்டியை சடக்கென்று நிறுத்திவிட்டுப் பாலத்தோடு ஓடிவந்து, அந்த அம்மாள் விழுந்த இடத்தில் தாமும் தண்ணிரில் குதித்து, அம்மாளின் உடம்பு மேலே கிளம்பினால் பிடித்துக் கொள்ளலா மென்று நினைத்து நாற்புறங்களையும் பார்த்துக் கொண்டு சிறிது தூரம் வெள்ளப் போக்கில் சென்றார். அதைக் கண்டவுடனே வேறு சில ஆண்பிள்ளைகளும் கதவைத் திறந்து கொண்டு பொத் பொத்தென்று ஆற்றிற்குள் குதித்துத் தேடத் தலைப்பட்டனர். ஆற்றுக்குள் குதித்த அந்த ஸ்திரீயின் உடம்பு சுமார் இருபது கஜ தூரத்திற்கு அப்பால் போய் வெளிப்பட்டது. அதற்குள் அந்த அம்மாள் மூக்கினாலும், வாயினாலும் ஏராளமான தண்ணீரை உள்ளே இழுத்துவிட்டமையால், வயிறு சால்போல் பெருத்து விட்டது. மூச்சும் நின்றுபோய்விட்டது. தண்ணீரில் விழுந்து தேடிய மனிதர்கள் உடனே விசையாக நீந்தி ஒரே பாய்ச்சலில் பாய்ந்து போய் அந்த அம்மாளைத் தூக்கித் தண்ணீரின்மேல் உயர்த்திப் பிடித்தபடி கரைக்குக் கொண்டு வந்தனர். உடனே எல்லோரும் சேர்ந்து முயற்சித்து அந்த அம்மாளைத் தலையில் வைத்துக் கொண்டு வேகமாய்ச் சுற்றிச் சுற்றித் தண்ணிரை வெளிப்படுத்தினர். அந்த ஸ்திரீயின் கைநாடி இருதய துடிப்பு முதலிய உயிர்ச்சின்னங்கள் யாவும் நின்றுபோய்விட்டன. அவள் இறந்து போனதாகவே எல்லோரும் எண்ணிவிட்டனர். ஆனாலும் ரயிலில் இருந்து இறங்கி ஓடிவந்த ஒரு டாக்டர் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “பிராணன் நின்றுபோய் அதிக நேரமாகாதிருந்தால், நாம் மூச்சை உண்டாக்க முயற்சித்துப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம் அந்த அம்மாளுடைய வயிற்றையும், அதையடுத்த இரண்டு விலாப் பக்கங்களையும் பிடித்துத் துருத்திப் போடுவதுபோல பத்து நிமிஷ நேரம் வரையில் அழுத்தி அழுத்திக் கொடுத்தார். அந்த பாகங்கள் மேலே இருந்த சுவாச ஈரல் குலையில்போய் முட்டி முட்டி, அதில் ஏறி இருந்த தண்ணிரில் சிறிதளவை வெளிப்படுத்தி அசைவுண்டாக்கவே, ஈரல்குலை உடனே அசைந்து சுவாசத்தை உண்டாக்கியது. அதற்குள் சிலர் ஊருக்குள் ஒடிப் போலீசாரைக் கூப்பிட, அவர்கள் ஒரு குதிரை வண்டியையும் அழைத்துக் கொண்டு அந்த