பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 செளந்தர கோகிலம்

இடத்திற்கு வந்தனர். அதற்குள் அந்த ஸ்திரீயின் உயிர் நன்றாகத் திரும்பிவிட்டது. ஆனால் அவள் கண்களைத் திறவாமல் மயங்கிப்படுத்திருந்தாள். போலீசார் ரயில் ஒட்டுகிறவரிடமும், இன்னம் நாலைந்து மனிதரிடத்திலும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு எல்லோரையும் ரயிலுக்கு அனுப்பிவிட்டு அந்த ஸ்திரீயைக் குதிரை வண்டியில் வைத்து ஊருக்குள்ளிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய், மேலும் ஒரு நாழிகை காலம் வைத்திருந்து தக்க சிகிச்சைகள் செய்ய, அந்த அம்மாள் நன்றாகத் தெளிவடைந்து எழுந்துவிட்டாள். அவளுக்கு வயசு முப்பத்தைந்துக்கு மேலும் நாற்பதிற்கு அதிக்கப்படாமலும் இருக்கலாம். உடம்பில் மூக்குத் திருகுகூட இல்லையாதலாலும், உடம்பில் நார்மடிப் புடவையொன்றே இருந்தமையாலும், அந்த அம்மாள் விதவையென்பது யூகிக்கத் தக்கதாயிருந்தது. ஜாதி பெயர் ஊர் முதலிய விவரங்களையெல்லாம். அந்த அம்மாளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளப் போலீசார் முயற்சித்தனர். ஆனாலும், அவள், தனது வாயையே திறவாமல், கல்போல இருந்துவிட்டாள். போலீசார் எவ்வளவோ தூரம் கேட்டுப் பார்த்தார்கள்; மறுமொழியே இல்லை. அவர்கள் அந்த ஸ்திரீ தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததான குற்றத்தைச் செய்திருப்பதாகப் பிராது தயாரித்து அதையும் எடுத்துக்கொண்டு அந்த அம்மாளை ஒரு குதிரை வண்டியில் வைத்து அழைத்துவந்து டிப்டி கலெக்டருக்கெதிரில் நிறுத்தினார்கள். உடனே டிப்டி கலெக்டர் அந்த அம்மாளை ஏற இறங்க இரண்டொருமுறை பார்த்தார்; பிராதைப் படித்தார். அந்த அம்மாள் மஞ்சட்குப்பம் ஆற்றில் பகல் பத்துமணி சுமாருக்கு விழுந்ததிலிருந்து, பொழுது விடிந்த பிறகே ஏதாவது ஒரு ஸ்டேஷனில் ஏறி இருக்க வேண்டுமென்றும், இல்லாவிடில் இருளிலேயே ஏதாவது ஆற்றில் விழுந்து இறந்திருப்பாள். ஆகையால் ரயில் பொழுது விடிகிற சமயத்தில் எந்த ஊருக்கு வந்ததோ அதிலாவது, அதற்கு இப்பாலுள்ள ஏதேனும் ஸ்டேஷனிலாவது ஏறி இருக்க வேண்டும் அல்லது வெகு தூரத்திலிருந்து வந்திருந்தால், அது வரையில் ஸ்திரீகளின் வண்டி காலியாகாமல் ஜனங்கள் இருந்தமையால், பகல் பத்து மணிவரையில் பொறுத்திருந்து ஜனங்கள் போனவுடன், அடுத்த ஆறாகிய கெடிலத்தில் விழுந்திருக்க வேண்டும்” என்று