பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 189

போலீசார் வியாக்கியானம் செய்திருந்ததையும் டிப்டி கலெக்டர் கவனித்தார். அவர் உடனே அந்த அம்மாளை நோக்கி, ‘அம்மா! நீங்கள் எந்த ஊர், உங்கள் பெயர் என்ன?” என்றார்.

அந்த ஸ்திரீ சிறிது நேரம் தயங்கி நின்றபின், “எனக்கு ஊருமில்லை பெயருமில்லை” என்று நிரம்பவும் விசனகரமாகக் கூறினாள். -

உடனே டிப்டி கலெக்டர் : உங்களைப் பார்த்தால், தக்க பெரிய மனிதருடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது. நீங்கள் ஏனம்மா ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் பிரயத்தனப்பட்டீர்கள்?

அந்த ஸ்திரீ : எனக்கு இந்த உலகத்தில் இருக்க இஷ்ட மில்லை! அதனால் ஆற்றில் விழுந்தேன். இந்த உலகத்தைப் பற்றிய நினைவெல்லாம் இருளடைந்து போயிருந்தது. இவர்கள் மறுபடி என் உயிரை மீட்டதான பெரிய பாவத்தைச் செய்து விட்டார்கள்.

டிப்டி கலெக்டர் : ஏனம்மா! நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்?

அந்த ஸ்திரீ : வேளாள முதலியார் ஜாதியைச் சேர்ந்தவள். டிப்டி கலெக்டர் : உங்களைச் சேர்ந்த சொந்த ஜனங்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லலாமா?

அந்த ஸ்திரீ : (கண்ணிரைச் சொரிந்த வண்ணம்) எனக்கு இந்த உலகத்தில் சொந்தமாயிருந்த மனிதர் எல்லோரும் பிரிந்து போய் விட்டார்கள். நான் இப்போது சுத்த அநாதை. என்னைப் படைத்த கடவுளுக்குத்தான் நான் இப்போது சொந்தம்.

டிப்டி கலெக்டர் : அம்மா! உங்களைப் பார்க்க, என் மனம் நிரம்பவும் இரங்குகிறது! நீங்கள் யார் என்பதையும் சொல்ல மாட்டேனென்கிறீர்கள்; என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தீர்கள் என்பதையும் சொல்லமாட்டே னென்கிறீர்கள். உங்கள் வரலாற்றைச் சொன்னால், உங்கள் மனிதரை வரவழைத்து உங்களை அவர்களிடம் ஒப்படைக்கலா மென்று பார்த்தேன். அதற்கு நீங்கள் இடங்கொடுக்கமாட்டே னென்கிறீர்கள். ஆனால் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள