பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 171

நிரம்பவும் பட்சமாகவும் நடத்துவார்கள். நீங்கள் கொஞ்ச காலம் இருந்து உங்கள் மனப்பிணியை ஆற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் எங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுடைய மனிதரிடம் கொண்டுபோய்விடச் சொன்னாலும் அப்படியே செய்கிறோம். இப்போது உங்களை வெளியில் விட்டால், நீங்கள் மறுபடியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பீர்கள். நான் இப்போது செய்யும் பிரஸ்தாபம் சர்க்கார் சட்டத்தின்படி செய்வதல்ல. இது கட்டாயமுமல்ல. நீங்களே கட்டாயமாய் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அப்படிச் செய்ய வேண்டும் - என்று கூறினார்.

அதைக்கேட்ட அந்த அம்மாள் எவ்விதமான மறுமொழி யையும் கூறமாட்டாமல் கீழே குனிந்தபடி நின்றாள். உடனே டிப்டி கலெக்டர் சேவகனை விட்டு வண்டி கொண்டு வரச் செய்தார். சேவகன் அந்த அம்மாளை அழைத்துக் கொண்டுபோய் வண்டியில் உட்காரவைத்து டிப்டி கலெக்டருடைய வீட்டில் கொண்டுபோய்விட்டு விஷயங்களையெல்லாம் டிப்டி கலெக்ட ருடைய தாய் தகப்பன்மார் சம்சாரம் முதலியோரிடம் கூறிவிட்டு வந்துவிட்டான். இந்த வழக்கில் டிப்டி கலெக்டர் காட்டிய தயாள குணத்தையும் பெருந்தன்மையையும் குறித்து ஜனங்கள் அவரை அபாரமாகப் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். ஊர் முழுதும் இதே பேச்சாக இருக்கிறது. டிப்டி கலெக்டரை விட, அவருடைய வீட்டு ஜனங்கள் அந்த அநாதை ஸ்திரீயை மிகுந்த பிரியத்தோடும், உவப்போடும், அநுதாபத்தோடும் வரவேற்று வருந்தி உபசரித்து அன்னமளித்துத் தங்கள் வீட்டிலேயே இருந்துவிடும்படி செய்திருக்கிறார்களாம். அவ்விடத்திலும் அந்த ஸ்திரீ தான் இன்ன ஊர் இன்னார் என்ற தகவலைச் சொல்லவே இல்லையாம். இதில் இன்னொரு விசேஷம் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. அந்த அம்மாள் டிப்டி கலெக்டருடைய வீட்டுக்குப் போனவுடன், சேவகனிடம் அவருடைய ஜனங்கள் அந்த அம்மாளின் வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்ட வுடனே, அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அந்த அம்மாளுக்கு உபசார வார்த்தை கூறினார்கள். அவருடைய ஆறு வயதுப் பெண் குழந்தை ஒடி வந்து தன் தாயாரைப் பார்த்து, ‘அம்மா இந்த அம்மாளைப் பார்த்தால், நம்முடைய பெரிய