பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - செளந்தர கோகிலம்

யிலேயே தனது தாய் அங்கே வந்திருக்கிறாளோ 70 அஞ்சி நடுங்கிய வண்ணம் அவள் திரும்பித் திரும்பி நாறபுறங் களிலும் உற்று நோக்கி, அது வெறும் பிரமையேயன்றி உண்மை யானதல்லவென்று தீர்மானித்துக் கொண்டாள். ஆயினும் பூஞ்சோலையம்மாளது கனிந்த வசீகரமான முகம் கோகிலாம் பாளின் அகக்கண்ணை விட்டு அகலாமல் எதிரில் தோன்றிக் கொண்டே இருந்தமையால், கோகிலாம்பாளது மன இளக்கமும் கலவரமும் அதிகரித்துப் போயின. அவள், ஐயோ! நான் என் அறையை விட்டுப் புறப்பட்டு வந்தபோது, அப்படியே அம்மா ளுடைய படுக்கையறைக்குப் போய், அவர்களுடைய முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு வராமல் போனேனே எப்போதும் ஒரே மாதிரியான வாஞ்சையோடு குழந்தை குழந்தை என்று அல்லும் பகலும் அநவரதமும் மாறாத பிரியத்தோடு கூப்பிட்டு என்னை உயிருக்குயிராய் மதித்து வரும் என் ஆருயிர்த் தாயின் இன்பகரமான வடிவத்தை இந்தக் கண்கள் இனி காணப் போகின்றனவா அவர்களைக் காண்பதனால், என் மனம் அடையும் இன்பத்தை இனி நான் அநுபவிக்கப் போகிறேனா? நான் இப்போதாவது திரும்பிப் போய் அவர்களுடைய முகத்தைப் பார்த்துவிட்டு வரலாமென்றால், அப்படிச் செய்தால், அதனால் என் மன உறுதி தளர்வடைந்து போய்விடுமோ என்ற நினைவு உண்டாகிறது. அல்லது, அம்மாளாவது மற்றவராவது விழித்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் சமாதானம் சொல்ல நேருமோ அல்லது என்னுடைய எண்ணம் நிறை வேறாமல் அவர்கள் தடுத்து விடுவார்களோ என்னவோ ஐயோ! என் தங்கை செளந்தரவல்லியைக்கூட நான் பார்க்காமல் வந்து விட்டேனே ஆ என்ன காலம் வந்து விட்டது என்ன மான பங்கம் ஏற்பட்டு விட்டது. உயிருக்குயிரான மனிதர்களைவிட்டு ஒரே விரக்தியும் மனவுறுதியும் கொண்டு உயிரைவிட வேண்டிய மகா கஷ்டமான நிலைமை ஏற்பட்டு விட்டதே’ என்று எண்ண மிட்டு தனக்குத்தானே ஆட்சேபணை சமாதானங்கள் செய்து கொண்டு தென்னந் தோப்பைக் கடந்து கமுகு மரங்களும் பூஞ்செடிகளும் அடர்ந்திருந்த பாகத்திற்குள் நுழைந்து சிறிது துரத்திற்கு அப்பாலிருந்த பெரிய கிணற்றை நோக்கி நடந்தாள். அந்த இடத்தை அடுத்தாற்போல இருந்த மணல் நிறைந்த