பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 செளந்தர கோகிலம்

கொடுக்க வேண்டுமென்று, கொஞ்சம் பழம் மிட்டாயியெல் - லாம் வாங்கி வந்தேன். அது திண்ணையில் இருக்கிறது. வெளியில் வந்து அதை நீ வாங்கிக்கொள்” என்று கூறினார். அதைக் கேட்ட தையலம்மை மிகுந்த களிப்பும் பூரிப்பும் அடைந்து, “எங்களுக்கு இவ்வளவு அன்போடு பழம் முதலியவைகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறதற்கும் இந்த உலகத்தில் அவ்வளவு பிரியமான மனிதர்கள் இருக்கிறார்களா! சரி, கொடுங்கள்” என்று கூறிய வண்ணம் அவரைத் தொடர்ந்து வாசலிற்கு வந்து சேர்ந்தாள்.

உடனே உதவிச் சாமியார் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்திருந்த பழங்களையும், மிட்டாயிப் பொட்டலத்தையும், வெற்றிலை பாக்கையும் எடுத்துக் கொடுக்க, அவ்வளவு பெருத்த வெகுமதி தங்களுக்குக் கிடைக்குமென்று கனவிலும் எதிர் பார்க்காத தையலம்மை மிகுந்த பிரமிப்பும் மட்டிலடங்கா மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்தவளாய் அவைகளை வாங்கி மடியில் கட்டிக் கொண்டாள். உடனே உதவிச் சாமியார் தமது மடியிலிருந்த ஐந்து ரூபாய் பணத்தை எடுத்து, “நீ சாப்பாட்டுக்கு இல்லாமல் பட்டினி கிடக்கிறதாகச் சொன்னாயே. இந்தப் பணத்தை வைத்துச் செலவு செய்துகொள். நான் வந்துவிட்டுப் போனதாக உன் புருஷனிடம் சொல்,” என்றார். பணத்தையும் வாங்கிக்கொண்ட தையலம்மை திடீரென்று குபேர சம்பத்தில் வைக்கப்பட்ட நித்திய தரித்திரனைப் போலானாள். அவளது மனம் அடைந்த சந்தோஷம் இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்வது சிறிதும் இயலாத காரியம். தனது பரம ஏழ்மை நிலைமையில் கடவுளே நேரில் வந்து அம்மாதிரியான உதவிகளைச் செய்கிறார் என்று அவள் நினைத்து மெய்மறந்து போய் உதவிச் சாமியாரைப் பலவாறு ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினாள்.

உடனே உதவிச் சாமியார் அவளை நோக்கித் தணிவான குரலில் பேசத்தொடங்கி, “ஏனம்மா உள்ளே இருக்கிற பெண் பிள்ளைக்கு புருஷனும் பெண்ணும் இருந்தார்களே! அவர்களிடம் இந்தப் பெண்பிள்ளை இராமல், ஏன் இங்கே வந்து இருக்க வேண்டும்?” என்றார். o

தையலம்மை, “அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்: திருவடமருதூரில் ஜவுளிக் கடைக்கார முதலியாரை இவர்கள்