பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 செளந்தர கோகிலம்

இவள் வேறே நாதியில்லாமல், யாரையோ துணைக்கு அழைத்துக் கொண்டு, என் கழுத்தை அறுக்கிறதற்கு இங்கே வந்து சேர்ந்தாள். இப்போதுகூட, இந்த ஊர் கிராம முன்சீப்புக்கு ஒர் உத்தரவு வந்ததாம். திருவடமருதூர்க் கிழவர் பிழைத்துக் கொண்டாராம். கமலவல்லி எங்கிருந்தாலும் பிடித்தனுப்ப வேண்டுமென்று உத்தரவு வந்ததாம். இவர் இங்கே வந்து பெண் எங்கே இருக்கிறாளென்று இவளிடம் கேட்டுப் பார்த்தார். இவள் தனக்கொன்றும் தெரியாதென்று சொல்லிவிட்டாள். அவ்வள வோடு அவர் போய்விட்டார். இவள் எனக்கு நீங்காத கால் கட்டாய் வந்து சேர்ந்திருக்கிறாள்’ என்றாள்.

உதவிச் சாமியார், ‘ஓகோ அப்படியா சங்கதி சரி சரி! புதுச்சேரியில் யாரோ தனவந்தருடைய பெண்ணை அண்ணா மலை அபகரித்துக் கொண்டு போனானென்று சொன்னாயே! அவர் இன்னார் என்ற தகவல் உனக்குத் தெரியுமா?’ என்று அலட்சியமாக வினவினார்.

தையலம்மை, “இவள் வந்த ஆரம்பத்தில், அதையெல்லாம் தன் தமயனாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் புதுச்சேரியில் ரெட்டியார் பாளையம் என்ற இடத்தில் இருக்கிற ஒரு வியாபாரியாம். அவருடைய பெயர் துரைக்கண்ணு முதலியாராம்” என்றாள்.

உதவிச் சாமியார், ‘ஓகோ சரிதான். அக்கிரமம் எத்தனை நாளைக்குத்தான் நிலைத்து நிற்கப் போகிறது; எல்லாம் இப்படித் தான் நசித்துப்போகும். சரி; எனக்கு நேரமாகிறது. என் குரு காத்திருக்கிறார்கள். நான் போய் வருகிறேன். குருடியை உபத்திர விக்காதே பாவம். ஏதோ உனக்குக் கிடைப்பது கூழோ கஞ்சியோ, அதில் அவளுக்கும் ஒரு வாய் கொடு. உனக்கு அதனால் குறைவு ஏற்படாது’ என்று கூறியவண்ணம் புறப்பட ஆயத்தமானார்.

உடனே திவான் சாமியார், உதவிச்சாமியாரைத் தனியாக அழைத்து ரகளியமாக, “புதுச்சேரியிலிருந்த வரையில் கமலவல்லி யின் நடத்தை எப்படி இருந்ததென்பதைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்’ என்றார். உடனே உதவிச் சாமியார் தையலம்மையை நோக்கி, “ஏனம்மா அதிருக்கட்டும். பையன் டம்பாச்சாரித் தனம் பண்ணியதன்றி, ஒரு தனவந்தருடைய பெண்ணையும் கெடுத்து