பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 187

துரைக்கண்ணு முதலியார், முக மாறுபாடடைந்து இடுக்கிட்டுப் போய் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து, “ஒகோ அப்படியா எதற்காக அதைத் தாங்கள் கேட்கிறீர்கள்? தங்கள் இருவருக்கும் அந்த மனிதருக்கும் என்ன சம்பந்தமோ?” என்றார். .

உடனே உத்விச் சாமியார் தமது சட்டைப் பையில் ஆயத்தமாக வைத்திருந்த விளம்பரங்களை எடுத்துக் கொடுத்தார். அவைகளை வாங்கிப் படித்த துரைக்கண்ணு முதலியார் பிரமித்து ஸ்தம்பித்துத் தமது மூக்கின்மீது விரலை வைத்து, ‘என்ன ஆச்சரியம், இது: அடாடா அவர்கள் எப்பேர்ப்பட்ட காரியம் செய்திருக்கிறார்கள்! உயிருடன் இருந்த மனிதரை இறந்து போனதாக வைத்துக் கொளுத்த அவர்களுடைய மனம் எப்படித் தான் துணிந்ததோ தெரியவில்லையே. அவர்கள் பார்வைக்கு மனிதர்களாய்த் தோன்றினாலும், அவர்களைப் பேய் பூதங்களுடைய வகுப்புகளில்தான் நாம் சேர்க்க வேண்டும். ஆனாலும் ஈசன் கைமேல் கூலி கொடுத்துவிட்டான். அவனுடைய தாய் கண்ண விந்து தடவுகிறாளாம், தகப்பன் குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தானாம், பிள்ளை இப்போது என்ன நிலைமையில் இருக்கிறானோ! ஆனால், அவனுடைய தங்கை மாத்திரம் இங்கே இருந்த வரையில் தேக சுத்தம் கெடாமல் இருந்ததாகவே எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அவளுக்கும் அண்ணனைப் போலக் கொஞ்சம் கூத்தாடி புத்தி. அவ்வளவேயன்றி வேறில்லை” என்றார்.

அதைக்கேட்ட உதவிச் சாமியார், “தாங்கள் இப்போது சொன்ன வார்த்தை எங்களுக்கு மனக் கலக்கத்தை உண்டாக்கி விட்டதே! மகன் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறானோ என்பதிலிருந்து, அவனுடைய இருப்பிடமும் தங்களுக்குத் தெரியாதோ என்று சந்தேகிக்கும்படியாக இருக்கிறது” என்றார்.

துரைக்கண்ணு முதலியார், “ஆம், அந்தத் தகவல் எனக்குத் தெரியாதுதான். நாங்கள் பஞ்சவர்ணக் கிளிபோலவும், உயிருக் குயிராகவும் வளர்த்து வந்த பெண் எங்கள் வீட்டைவிட்டுப் போனபின், ‘சே! அவளுடைய முகத்தில்கூட இனி நாம் விழிக்கக் கூடாது என்று நானும், என் சம்சாரமும் பிரதிக்ஞை செய்து