பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 17

வாவியின் கரையிலேதான் முன்னொரு நாள் கண்ணபிரானுடன் அந்த அணங்கும் தனித்திருந்து சம்பாஷித்தது. ஆதலால், அந்த நினைவு மின்னல் மின்னுவதுபோல அவளது மனத்தில் விரைவாகத் தோன்றியது. தோன்றவே, ஐயோ! என் பிரான காந்தருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தம் கடைசியில் கிஞ்சித் போகமாக அல்லவா முடிந்து போய்விட்டது. அவருக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் ஏற்பட்டால், அதற்குமுன் அபசகுனமாக ஏதேனும் கெடுதல் நேர்ந்துகொண்டே வந்தது. ஆதியிலிருந்து என் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் கருத்து இப்போதுதான் தெளிவாக விளங்குகிறது. நான் இப்படி அற்பாயிசாய் மாண்டு போய்விடுவேன் என்பதையும், அவரை நான் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும் ஏற்பாடு ஒரு நாளும் நிறைவேறப் போகிறதில்லை என்பதையும் ருசிப்பிக்கும் அறிகுறிகளே அவைகள் என்பது இப்போது நன்றாய்த் தெரிகிறது! முதல் முதலில் நானும் என் தங்கையும் கடற்கரை ரஸ்தாவில் வந்துகொண்டிருந்த காலத்தில், அவரது காற்று வாடை எங்கள் வண்டியில் வீசியதுதான் தாமதம். உடனே வண்டிக்கும், குதிரைக்கும், எங்களுக்கும் பெருத்த பிராணாபாயம் வந்து நேரிட்டுவிட்டது. பிறகு நான் இந்த இடத்தில் வந்து தனியாக உட்கார்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கையில் இங்க்ே அவர் வர, அவரது காற்று வாடை வீசியபடியால், நாகப் பாம்பினால் எனக்கு அபாயம் நேரத்தக்க மகா பயங்கரமான நிலைமை ஏற்பட்டுப் போயிற்று. அது மட்டுமா? முதன் முதலாக அவருடைய உடம்பு என்மீது பட்டதுதான் தாமதம் என் தங்கை திடீரென்று வந்து சேர்ந்தாள், என் கற்பை நான் அறவே இழந்து விட்டேன் என்று அவள் தப்பான எண்ணங்கொண்டு என்னைத் துற்றும்படியான நிலைமை ஏற்பட்டது. பிறகு சகல ஜனங் களுக்கும். எதிரில் மந்திரச் சடங்குகள் மூலமாய் என்னை அவருக்கு உரியவள் ஆக்க நிச்சயதார்த்தம் நடந்த காலத்தில், மகா விபரீதமான சம்பவங்கள் நேர்ந்து முதலில் அவரையும், பிறகு அவரது தாயையும் பிரித்துக்கொண்டு போய்விட்டன. அதுவும் போதாதென்று, நான் அவருடைய கடிதத்தைக் கொண்டு அவரைப் பார்க்கப் போனதிலிருந்து எத்தனை தீமைகளும், என்றைக்கும் அழியாத மானக்கேடும், முடிவில் என் தலைக்குச் சீட்டும் வந்து

செ.கோ.:V-2