பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 செளந்தர கோகிலம்

கொண்டிருக்கிறோம். அவள் எங்கே இருக்கிறாளென்ற விவரத்தைக்கூட நாங்கள் தெரிந்துகொள்ள நினைக்கவில்லை. அவள் வீட்டை விட்டுப் போய் ஒரு மாசத்திற்குப் பிறகு, அவளிடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. தான் அறியாத்தனத் தினால் மதி கெட்டு வந்துவிட்டதாகவும், எங்களைப்பற்றிய நினைவும் விசனமும் பொறுக்க முடியவில்லையென்றும், எங்கள் புகைப்படம் அனுப்பும்படியும், தான் அந்தப் புருஷனிடத்தில் செளக்கியமாய் இருப்பதாகவும், ஆனால் கொஞ்ச பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் நிரம்பவும் கெஞ்சி மன்றாடி எழுதி இருந்தாள். அந்த துன்மார்க்கியின் விஷயத்தில் எங்கள் இருவருக்கும் கொஞ்சமும் இரக்கம் உண்டாகவில்லை. நாங்கள் கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டுப் பேசாமல் இருந்துவிட் டோம். அவளுக்கு மறுமொழி எழுதவே இல்லை’ என்றார்.

உதவிச் சாமியார், ‘அந்தக் கடிதத்தில் அவர்கள் என்ன விலாசம் கொடுத்திருந்தார்களென்பது நினைப்பில்லையா?” என்றார். . ~

துரைக்கண்ணு முதலியார், ‘தஞ்சாவூர் ஸிடி போஸ்டு மாஸ்டர் மேல் விலாசம் பார்வையிட்டு சுந்தரமூர்த்தி முதலி யாரிடம் கொடுப்பது என்று எழுதியிருந்தாள். சே! அந்த நாயின் பெயரை வைத்து எழுதினால், அவன் செய்த காரியத்தை நாங்கள் ஆமோதிப்பது போலாகுமென்று நினைத்தும் நான் அதற்குப் பதில் எழுதவில்லை’ என்றார்.

அதைக்கேட்ட சாமியார் இருவரும் ஏமாற்றமும் ஏக்கமும் அடைந்து மேலே என்ன பேசுவது என்பதை அறியாமல் தவிக்கத் தொடங்கினர். அப்பொழுது ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்த துரைக்கண்ணு முதலியாருடைய சம்சாரம், ‘மறுபடி, ஐந்தாறு மாசத்திற்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. இப்போது இரண்டு தினங்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. இரண்டையும் பிரித்துக் கூடப் பார்க்காமல் பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம். அந்தக் கடிதங்களை வேண்டுமானால் உடைத்துப் பார்த்து மேல் விலாசத்தைத் தெரிந்து கொள்ளலாம்” என்றாள்.

உடனே உதவிச் சாமியார் மிகுந்த களிப்படைந்து, “ஆம் அம்மணி! அவைகளை உடைத்துப் பார்த்து இப்போதைய