பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 189

விலாசத்தை மாத்திரம் சொல்லுங்கள். அதுவே எங்களுக்குப் போதுமானது’ என்றார்.

உடனே துரைக்கண்ணு முதலியார், “அடி கடிதங்களை நீ உடைக்காதே. அப்படியே எடுத்துவா, சுவாமிகளே! நீங்கள் கூட அந்தக் கடிதங்களை இங்கே பிரிக்க வேண்டாம். கடிதங்களில் பலவித அசங்கியங்கள் இருக்கலாம். அவைகளைப் பார்க்க எங்கள் மனம் இன்னம் அதிகமாய்ப் புண்பட்டுப் போகும். ஆகையால், இரண்டு கடிதங்களையும் வாங்கிக் கொண்டு போய் உங்கள் பிரியப்படி செய்து கொள்ளுங்கள். அவளுடைய நினைவே எங்களுக்கு உண்டாகக்கூடாது என்று இருந்தோம். நீங்கள் வந்து அந்த நினைவை உண்டாக்கிவிட்டீர்கள்’ என்றார்.

சாமியார் இருவரும் அவரது விருப்பப்படி செய்வதாய் ஒப்புக் கொண்டனர். முதலியாரது மனைவி சிறிது நேரத்தில் இரண்டு கடிதங்களுடன் திரும்பி வந்து அவைகளைக் கீழே வைக்க, துரைக்கண்ணு முதலியார் அவைகளைக் கையாலும் தொடாமல், உதவிச் சாமியாரே எடுத்துக்கொள்ளும்படி செய்தார். உடனே சாமியார் இருவரும் அவருக்கு உபசார வார்த்தைகள் கூறி நமஸ்கரித்தபின் அந்த வீட்டைவிட்டு வெளியில் சென்றனர். அப்பொழுது உதவிச் சாமியார் திவான் சாமியாரை நோக்கி, ‘சுவாமிகளே! பார்த்தீர்களா இவ்விருவர் களுடைய மேலான குணத்தை எது போனாலும் போகட்டும், மானமொன்றே பிரதானம் என்ற கொள்கையைக் கடைப் பிடித்து தங்களுடைய உயிரை விட்டுக் கொண்டிருக்கிறதைப் பார்த்தீர்களா! இவர்களுடைய வர்த்தம் போய் விட்டது! இப்பொழுது இவர்கள் நிரம்பவும் ஏழ்மைத் தன்மை அடைந்து கஷ்டப்படுகிறார்கள்! விளம்பரத்தில் கண்ட சன்மானத் தொகையைக் கொடுக்கலாமென்று கேட்டு வாங்கினேனல்லவா. இவர்களுடைய மனவுறுதியைப் பார்த்தவுடன், அதை எடுத்துக் கொடுக்க எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. நான் கொடுத்தால், அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்களென்ற ஒர் எண்ணம் என் மனசில் தோன்றிவிட்டது. அதனால் பேசாமல் வந்து விட்டேன். என்னுடைய உத்தேசம் என்ன தெரியுமா? இந்த ஆயிரம் ரூபாய் நோட்டை ஒரு கடிதத்தில் வைத்து தபால்