பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 செளந்தர கோகிலம்

மூலமாய் அனுப்பி விடுவோம். நம்முடைய விலாசத்தை நாம் அதில் கொடுக்காமல் இருந்துவிட்டால் அதை அவர் திருப்பி அனுப்பவும் முடியாமல் போய் விடும். பணத்தை அவர் உபயோகித்துக் கொள்வார்’ என்றார்.

அதைக்கேட்ட திவான் சாமியார், “ஆம், அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால், இவருக்கு ஏற்பட்டிருக்கும் அபாரமான நஷ்டத்திற்கு ஆயிரம் ரூபாய் ஒரு பொருட்டா யிராது. ஆகையால், ஐயாயிரம் ரூபாயாக வைத்து அனுப்பிவிடு வோம். கடிதத்தை ரிஜிஸ்டர் செய்து அனுப்பிவிடலாம்,’ என்றார். உதவிச் சாமியார், “கடிதத்தை ரிஜிஸ்டர் செய்தால், அனுப்பு வோருடைய மேல் விலாசம் அதில் இருக்க வேண்டுமே” என்றார்.

திவான் சாமியார், ‘அனுப்புதல் திருவடமருதூர் மேகலிங்கப் பண்டாரம் என்று வெளியில் எழுதிவிடுவோம். உள்ளே வைக்கும் கடிதத்தில், அந்த விலாசம் பொய் விலாசமென்றும், அது தபால் விதியை அநுசரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற தென்றும், அந்த விலாசத்திற்கு அனுப்பும் கடிதம் முதலியவை திரும்பி வந்துவிடுமென்றும் எழுதிவிடலாம்” என்றார்.

உதவிச் சாமியார் அதை ஏற்றுக் கொண்டார். உடனே இருவரும் நேராக அந்த ஊர்த் தபால் கச்சேரிக்குச் சென்று அவர்கள் எண்ணியபடி ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து ரிஜிஸ்டர் செய்து அனுப்பிய பின் தம்மிடமிருந்த கடிதங்களை எவருக்கும் தெரியாதபடி பிரித்துப் பார்க்க வேண்டுமென்ற கருத்தோடு மறைவான ஒரிடத்தை நோக்கிச் சென்றனர்.