பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-ஆவது அதிகாரம் கலியானக் கோலம் - கிரகப்பிரவேசம்

ஆ கிலாம்பாள் புரசைப்பாக்கம் பங்களாவைவிட்டு வண்ணாரப்பேட்டை பங்களாவுக்குப் போய்ச் ல் சேர்ந்த பிறகு காலை சுமார் 10 மணிக்கு ஆ வக்கீல் ராமராவ் பூங்சோலையம்மாளால் அனுப்பப்பட்டு வண்ணாரப்பேட்டை தி பங்களாவுக்கு வந்து சேர்ந்து, முதல் நாள் Gree இன்ஸ்பெக்டரால், தனக்கு நேரிட்ட துன்பத்தையும், அதிலிருந்து தான் தப்பிவந்த விதத்தையும் கோகிலாம்பாள் கூறத் தெரிந்து கொண்டார். அது சம்பந்தமாய் இன்ஸ்பெக்டர் மீது வழக்குத் தொடருவதற்குப் போதிய சாட்சியம் இருந்தது. ஆனாலும், அதனால் கோகிலாம்பாள் கச்சேரிக்குப் போய் உடத்திரவத்திற்கு இலக்காக நேருமென்ற காரணத்தினால், தாம் அவர்மீது எவ்வித நடவடிக்கையையும் எடுத்துக் கொள்வது அநுசிதமான காரியம் என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். தாம் எவரும் கச்சேரிக்கு வர இயலாத நிலைமையில் இருப்பது பற்றி, வக்கீலே சகலமான காரியங்களையும் நடத்தி, கண்ணபிரானை விடுவித்து அழைத்து வருவதற்குத் தேவையான பிரயத்தனங்களையெல்லாம் செய்யு மாறு கோகிலாம்பாள் அவரிடம் கேட்டுக்கொண்டு, அதற்காக அவருக்கு மறுபடியும் இருநூறு ரூபாய் பணம் கொடுத்தாள்; கண்ணபிரானை நீதிபதி ஜாமீனில் விடும் பக்ஷத்தில் அவனை அவ்விடத்திற்குக் கொணர்ந்துவிட்டுப் போகவும், விடாத

பrத்தில், வந்து தகவல் தெரிவிக்கவும் வேண்டிக் கொண்ட தன்றி, வக்கீலுக்குத் தெரியவேண்டிய சகலமான தகவல்களையும் தெரிவித்து அவரைக் கச்சேரிக்கு அனுப்பி வைத்துத் தனது மணாளனுக்கு மூன்று வேளையிலும் ஆகாரம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவதற்கு ஒரு வேலைக்காரனை அமர்த்தி,